பக்கிங்காம் அரண்மனை-வெள்ளை மாளிகையின் மேல் எங்கள் கொடி பறக்கும் : ஐ.எஸ்.ஐ.எஸ்
ஈராக்கில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், ஷியா முஸ்லிம் அரசு படையினருக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி வந்தனர். ஈராக் மற்றும் சிரியாவின் பல் வேறு பகுதிகளை பிடித்து இஸ்லாமிய அரசாக் அறிவித்து கொண்டனர். இதை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக வான் வழி தாக்குதல் நடத்த திட்டமிட்டது. அரபு நாடுகள் மற்றும் இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியோர் உதவியுடன் ஈராக் மற்றும் சிரியா பகுதியில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா கடந்த ஜூலை மாதம் முதல் செப்டமபர் மாதம் வரை வான் வழி தாக்குதல்கள் நடத்தியது.ஆஸ்திரேலியாவில் இருந்து சென்று தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த 17 வயது இளைஞர் அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாட்டு தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ள வீடியோ ஒன்றை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டு உள்ளனர்.ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் அப்துல்லா எலிமிர் ( வயது 17)வீட்டில் இருந்து ஓடிப்போய் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிர்வாதிகள் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார்.
அவர் துப்பாக்கியுடன் தோன்றி மேற்கத்திய நாட்டு தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பது போல் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அவரை சுற்றி சில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் உள்ளனர்.அதில் எலிமி உரையாற்றி உள்ளார். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கும் ,பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலிய மக்களுக்கும். வடக்கு ஈராக்கில் ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக வான் வழி தாக்குதல் நடத்த அமைக்கப்பட்ட கூட்டணி குறித்து பேசி உள்ளார்.
அந்த உரையில் இந்த கூட்டணியை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கையை பொருட்படுத்தாமல் பக்கிங்காம் அரண்மனை மற்றும் வெள்ளை மாளிகையின் மேல் எங்கள் கொடி பறக்கும் வரை ஐ.எஸ்.ஐ.எஸ் ஓயாது.
தலைவர்களுக்கு ஓபாமா மற்றும் டோனி அபோட் ஆகியோருக்கு சொல்லிக்கொள்கிறேன்.நாம் வேண்டும் என்று இந்த ஆயுதங்களை ஏந்தவில்லை,நாங்கள் இந்த சண்டையை நிறுத்தப்போவது இல்லை. உங்கள் நிலங்களை அடையும் வரை எங்கள் ஆயுதங்களைபோடப்போவது இல்லை.ஒவ்வொரு கொடுங்கோலனின் தலையை எடுக்கும் வரை மற்றும் ஓவ்வொரு தேசத்திலும் உயரே கறுப்புக்கொடி பற்க்கும் வரை நாங்கள் சண்டையை நிறுத்தப் போவது இல்லை நாங்கள் உங்களுடன் போரிடுவோம். உங்களை தோற்கடிப்போம். என அந்த வீடியோவில் உரையாற்றி உள்ளார்.
கடந்த ஜூன் மாதம் முதல் எலிமிர் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து மற்றொரு இளைஞருடன் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
எலிமிர் மூளைசலவை செய்யபட்டு இயக்கத்தில் சேர்க்கபட்டு உள்ளதாக அவரது குடுமபத்தினர் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து ஆஸ்திரேலிய பிரதம்ர் டோனி அபோட் வெளியிட்டு உள்ள அறிக்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால மீண்டும் அச்சுறுத்தல் உள்ளதை இது காட்டுகிறது.என கூறி உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply