சஜின்வாஸின் செயற்பாடு முன்பள்ளி சிறுவனுக்கு ஒப்பானது: ரவி எம்.பி.
வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு எம்.பி.யான சஜின் டி. வாசின் செயற்பாடானது முன்பள்ளிக்கு செல்லும் சிறுபிள்ளையின் செயற்பாட்டுக்கு ஒப்பானதாகும் என்று தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஒழுக்கமற்றவராக நடந்து கொண்ட சஜின்வாஸ் எம்.பி.யும் அமைச்சின் செயலாளர் சேனுகா செனிவிரத்னவும் பதவி விலக வேண்டும் என்றும் சவால் விடுத்தார்.பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அமர்வின் போது இடம்பெற்ற விசேட வியாபார பண்ட அறவீட்டுச்சட்டத்தின் கீழ் கட்டளையை நிறைவேற்றிக்கொள்வதற்கான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரவி எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்
இலங்கையின் முன்னாள் பிரித்தானிய தூதுவர் மீது இலங்கை வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு எம்.பி.யான சஜின் டி வாஸ் மேற்கொண்ட தாக்குதலானது முன்பள்ளிக்குச் செல்லும் சிறுபிள்ளையின் செயற்பாட்டுக்கு ஒப்பானதாகும். அதுமாத்திரமின்றி ஒழுக்கமற்ற இத்தகைய செயற்பாடானது மிகவும் பாரதூரமானது.
இத்தகையவர்களைக்கொண்டுள்ள அரசாங்கம்தான் இன்று ஐக்கிய தேசியக்கட்சியின் மீது புலிச்சாயம் பூசி போஸ்டர்களை ஒட்டி பிரசாரம் மேற்கொள்கின்றது. புலிகளுடன் சங்கமித்திருப்பது அரசாங்கமே ஆகும். ஐக்கிய தேசிய கட்சியல்ல. ஐக்கிய தேசிய கட்சியின் மீது புலிச்சாயம் பூசி சேறு பூசி நாட்டு மக்களின் பொக்கட்டுக்களை அரசு வெறுமையாக்கிக் கொண்டிருப்பதுதான் உண்மையாகும். அரசாங்கம் பெற்றுக்கொண்ட யுத்த வெற்றியின் பிரதி பலன்தான் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பாகும்.
நிலத்தை முத்தமிடுவதால் மாத்திரம் இலங்கையராகி விட முடியாது. முஸ்லிம்களும் கத்தோலிக்கர்களும் இம்சிக்கப்படுகின்றனர்.
மேலும் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையாக இருக்கிறது. எனவே உடனடியாகவே தேர்தலை நடத்துங்கள் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply