கமலேஷ் சர்மா இலங்கை விஜயம் ஜனாதிபதியையும் சந்தித்துரையாடுவார்
ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஸ் சர்மா நேற்றுச் சனிக்கிழமை இலங்கை வந்தடைந்தார்.இலங்கையில் தங்கியிருக்கும் ஐந்து நாட்களில் அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ்,சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஆகியோரையும் இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர், தேர்தல் ஆணையாளர் ஆகியோரையும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடுவார்.
அத்துடன், யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply