அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளில் எபோலா தாக்குதல் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது: உலக சுகாதார நிறுவனம்
ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதி நாடுகளான லைபீரியா, சியரா லியோனே போன்ற நாடுகளில் தோன்றிய எபோலா வைரஸ் நோய், அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளுக்கும் பரவி இன்று உலகையே பெரும் அச்சத்துக்கு உள்ளாக்கி வருகிறது. இந்த நோய்க்கு சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாததாலும், இந்த நோயாளிகளின் உடலில் இருந்து வெளிப்படும் வியர்வை, உமிழ்நீர் போன்ற திரவங்களால் எளிதில் பரவக்கூடியதாலும், எபோலா நோய் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை எபோலா நோய் தாக்கியுள்ளதாகவும், அதில் 4 ஆயிரத்து 922 பேர் உயிரிழந்திருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறப்பட்டு உள்ளது. அதன்படி லைபீரியாவில் 4,655 பேர், சியாரா லியோனேவில் 3,896 பேர், கினியாவில் 1,553 பேர், நைஜீரியாவில் 20 பேர், அமெரிக்காவில் 4 பேர் மற்றும் செனகல், மாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தலா ஒருவர் என எபோலா நோய் தாக்கியுள்ளதாகவும் அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்த நாடுகளில் பணியாற்றிய 450 சுகாதார பணியாளர்களும் எபோலா நோய் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாகவும், இதில் 244 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அந்த புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply