உயர்நீதிமன்றத்தின் ஆலோசனை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் மூன்­றா­வது தட­வை­யாக ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யுமா? முடி­யாதா? என்ற உயர்நீதி­மன்­றத்தின் ஆலோ­சனை நேற்று மாலை அல­ரி­மா­ளி­கைக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது. இந்த விடயம் தொடர்பில் நேற்று ஆராய்ந்த உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்கள் தமது ஆலோ­ச­னையை ஜனா­தி­ப­திக்கு அனுப்­பி­வைத்­துள்­ளனர்.பிர­தம நீதி­ய­ரசர் மொஹான் பீரிஸ் தலை­மையில் உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்­க­ளான கே.ஸ்ரீபவன், சந்­திரா ஏக்­க­நா­யக்க,பிரி­யசான் டெப், ஈவா வன­சுந்­தர, ரோஹினி மார­சிங்க, புவ­னேக அலு­வி­காரை, சிசிர டி அப்று, சரத் டி அப்று, பிரி­யந்த ஜய­வர்த்­தன ஆகியோர் இந்த மனுவை விசா­ரித்து நேற்று ஆலோ­ச­னையை அல­ரி­மா­ளிக்­கைக்கு அனுப்­பி­யுள்­ளனர்.
தன்னால் மூன்­றா­வது தட­வை­யாக ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யுமா என்­பது தொடர்பில் ஆலோ­சனை வழங்­கு­மாறு கடந்த வாரம் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ உயர் நீதி­மன்­றத்­திடம் கோரிக்­கை­வி­டுத்­தி­ருந்தார்.

இது தொடர்பில் எழுத்து மூல­மான சமர்ப்­ப­ணங்­களை 7 ஆம் திக­திக்கு முன்னர் அனுப்­பு­மாறு சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்­தி­டமும் சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­க­ளி­டமும் உயர்­நீ­தி­மன்றப் பதி­வாளர் கோரி­யி­ருந்தார்.

இந்தக் கோரிக்­கைக்கு அமைய ஜனா­தி­ப­திக்கு ஆத­ர­வா­கவும் எதி­ரா­கவும் 38 மனுக்கள் உயர் நீதி­மன்­றத்­திற்கு அனுப்­பப்­பட்­டி­ருந்­தன.

குறிப்­பாக பிர­தமர் டி.எம்.ஜய­ரத்ன மற்றும் கோமின் தயா­சிறி, ஜெ.சி.வெலி­ய­முன, பேரா­சி­ரியர் சுதந்த லிய­னகே, பேரா­சி­ரியர் சம்பத் பண்­டார அம­ர­துங்க, கலா­நிதி பாக்­கிய சோதி சர­வ­ண­முத்து, சுனில் வட்­ட­கல ஊட­க­வி­ய­லாளர் கே.டப்ள்யூ ஜன­ரஞ்­சன உள்­ளிட்ட 38 பேர் மனுக்­களை உயர் நிதி­மன்­றத்­திற்கு சமர்ப்­பித்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில் நேற்று இது தொடர்பில் ஆராய்ந்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு தமது தீர்மானத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ளதாக. சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உப்புல் ஜயசூரியவும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply