வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சொந்த மண்ணில் குடியேறும் நாள் வெகு தொலைவில் இல்லை மீலாத் செய்தியில்: ஜனாதிபதி மஹிந்த

இலங்கை வாழ் முஸ்லிம்கள் உலகெங்கிலுமுள்ள தமது முஸ்லிம் சகோதரர்களுடன் இணைந்து இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை நினைவுகூருவதை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.முஸ்லிம்களிடம் மிக முக்கியமான நாளாகக் கருதப்படும் இத்தினம், ஐக்கியத்தையும் சமாதானத்தையும் வலியுறுத்தி மிக முக்கியமான ஒரு சிறந்த சமய கலாசார பாரம் பரியத்தைக் கட்டியெழுப்பி ஆய்வு மற்றும் அறிவியல் சிந்தனைகளின் அபிவிருத்திக்கு வித்திட்ட முஹம்மது (ஸல்) அவர்களுடைய போதனைகளைக் கவனத்திற்குக் கொண்டுவருகின்றது.

முஹம்மது (ஸல்) அவர்களின் போதனைகளின் வழியில், இஸ்லாம் மனித சமூகத்தை சகோதரத்துவம், பரஸ்பர புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை என்பவற்றின்பால் வழி காட்டி அழைத்துச் செல்வதுடன் இன்று உலகெங்கிலும் பல்வேறு சமூகங்கள் மத்தியிலும் பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் பயங்கரவாதத்தையும் வன்முறையையும் நிராகரித்து அமைதியும் அகிம்சையும் நிறைந்ததொரு சிறந்த வழியைக் காட்டுகின்றது.

இலங்கையில் மீலாதுன் நபி விழா ஒரு தேசிய விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்வருட மீலாதுன் நபி விழாவை மாத்தறை மாவட்டத்தில் நடத்தி அங்குள்ள முஸ்லிம்களின் சமய, கலாசார நடவடிக்கை களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எனது அர சாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் சனநாயகத்தை ஏற்படுத்தி வட மாகாணத்தையும் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடு விப்பதற்காக மிக வேகமாக நடவடிக்கைகள் முனனெடுக் கப்பட்டுவரும் ஒரு சூழலில் இலங்கை முஸ்லிம்கள் இவ்வருட மீலாத் விழாவை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர்.

இவ்விரண்டு மாகாணங்களில் இருந்தும் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்து அங்கு ஒரு தனியான இன ஆட்சியை ஏற்படுத்துவதையே பயங்கரவாதம் தனது இலக்காகக் கொண்டிருந்தது.

கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலி ருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தங்களது சொந்த மண்ணில் திரும்பிச் சென்று ஏலவே இருந்த அன்பும் அமைதியும் நிறைந்த வாழ்க்கையை மீள ஆரம்பிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இந்த விசேட தினத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவி எமது மக்கள் மத்தியில் புரிந்துணர்வும் சகிப்புத் தன்மையும் ஏற்பட வேண்டும் என்று அவர்களது பிரார்த்தனைகளில் நானும் இணைந்து கொள்கிறேன்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply