காங்கிரஸ் கட்சி நடத்தும் மாநாட்டில் பங்கேற்க ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களுக்கு சோனியா அழைப்பு
காங்கிரஸ் கட்சி நடத்தும் மாநாட்டில் பங்கேற்க ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு வெறும் 44 இடங்களை மட்டுமே அந்த கட்சியால் கைப்பற்ற முடிந்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி, மாநில கட்சிகளை அரவணைத்து செல்ல விரும்புகிறது. இதற்கு ஒரு வழியாக அது நாட்டின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் 125-வது பிறந்த நாளை பயன்படுத்திக்கொள்கிறது.
நேருவின் 125-வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் 17, 18 தேதிகளில் காங்கிரஸ் கட்சி சர்வதேச மாநாடு ஒன்றை நடத்துகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும்படி அந்த கட்சி, மாநில கட்சிகளின் தலைவர்களை அழைக்க முடிவு செய்தது.
அதன்படி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதாதளத்தின் மூத்த தலைவர் நிதிஷ் குமார் ஆகியோருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனிப்பட்ட முறையில் அழைப்பு அனுப்பி உள்ளார்.
இதே போன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்களுக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கோ, பாரதீய ஜனதா தலைவர்களுக்கோ, அதன் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மாநில கட்சிகளின் தலைவர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை.
மம்தா பானர்ஜி, இந்த மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply