எமது ஆதரவைக் கோரும் வேட்பாளர்கள் தீர்மானம் மிக்க பதிலை வழங்கவேண்டும் :சுரேஸ் பிரேமச்சந்திரன்

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் எமது ஆத­ரவைக் கோரும் வேட்­பா­ளர்கள் நாம் முன்வைக்கும் கோரிக்­கைகள் தொடர்பில் மிகத் தெளி­வான தீர்­மா­ன­மிக்க பதிலை வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார். ஜனா­தி­பதி தேர்தல் ஒன்று நடை­பெ­ற­வுள்ள இன்­றைய சூழ்­நி­லையில் எதிர்க்­கட்­சி­களின் பொது வேட்­பாளர் யார் என்­பது தொடர்பில் எமக்கு இன்றும் தெரி­யாது. ஆயினும் வேட்­பா­ளர்கள் யாராக இருப்­பினும் எமது தமிழ் மக்­களின் வாக்கு பலத்­தினை பெற விரும்­புவோர் எமது மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்கக் கூடிய வகையில் தீர்­மா­ன­மிக்க பதிலை எமது மக்கள் சார்­பாக நாம் முன்­வைக்கும் கோரிக்­கை­க­ளுக்கு வழங்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

கொழும்பில் நேற்று நடை­பெற்ற அதி­கா­ரத்தை பகிர்ந்து ஐக்­கி­ய­படு இயக்கம் நடாத்­திய ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து அங்கு உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது;

தொடர்ந்து தமது ஆட்­சியை இந்த நாட்டில் நிலை நிறுத்த வேண்டும் என்­ப­தற்­காக எமது ஆத­ரவை கோறும் அர­சாங்கம் யுத்தம் முடி­வுற்று 5 வரு­டங்கள் ஆகியும் எமது மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்கக் கூடிய எவ்­வித நட­வ­டிக்­கை­யையும் முன்­னெ­டுக்­க­வில்லை. மாறாக முப்­ப­டை­களின் மூலம் தமிழ் மக்­களின் நிலங்­களை தொடர்ந்து சூறை­யா­டு­கி­றது. எனவே பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசிய கட்சி நாம் முன்­வைக்­கின்ற வினாக்­க­ளுக்கு தெளி­வான தனது நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்த வேண்டும்.

தமிழ் மக்­க­ளுக்கு சொந்­த­மான 65,000 ஏக்கர் நிலப்­ப­ரப்­பினை ஏற்­க­னவே கப­ளீ­கரம் செய்­துள்ள அர­சாங்கம் இன்று காங்­கே­சன்­துறை மாதகல் எனும் இடத்தில் 75 மீன­வர்­களின் மீனவ பட­குகள் இழுக்­கப்­படும் இடத்­தினை கடற்­ப­டை­யினர் மூலம் அப­க­ரித்­துள்­ளது.

இதனால் மீன­வர்­களின் பட­குகள் கடு­மை­யான காற்­றுடன் கூடிய கால நிலைக்கு மத்­தியில் கடலில் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் பட­குகள் சேத­ம­டை­கின்ற நிலைமை ஏற்­பட்­டுள்­ள­தோடு மீன­வர்­களின் முழு வாழ்­வா­தா­ரமும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. 75 குடும்­பங்கள் இன்று வாழ்­வா­தாரம் இன்றி தவிக்­கின்­றனர். தமிழ் மக்­களின் வாக்கு பலத்­தினை பெற விரும்பும் இந்த அர­சாங்கம் சாதா­ரண மீன­வர்­களின் நிலத்தைக் கூட விட்டு வைக்­க­வில்லை.

இரண்­டரை இலட்­சத்­திற்கும் மேற்­பட்ட மக்கள் தமது சொந்த இடங்­களில் குடி­யேற்­றப்­ப­டாமல் இந்­தி­யா­விலும் முகாம்­க­ளிலும் உள்­ளனர். அவர்­களை தமது சொந்த இடங்­களில் மீள்­கு­டி­யேற்றம் செய்ய முடி­யுமா? தமிழ் மக்­களை மீள்­கு­டி­யேற்­றினால் பெரும்­பான்மை மக்­களின் வாக்கு பலத்­தினை இழந்து விடுவோம் என்று அஞ்­ச­தே­வை­யில்லை. ஏனெனில் நாம் கேட்­பது சிங்­கள மக்­களின் நிலத்­தினை அல்ல, தலை­முறை தலை­மு­றை­யாக நாம் வாழ்ந்த எமது சொந்த நிலத்­தி­னையே கேட்­கிறோம். இதனால் சிங்­கள மக்கள் எந்த வகை­யிலும் பாதிப்­ப­டைய மாட்­டார்கள். நிச்­ச­ய­மாக அவர்கள் இந்த மீள்­கு­டி­யேற்­றத்­தினை ஏற்றுக் கொள்­வார்கள்.

மேலும், இன்று வடக்கில் சிவில் நிர்­வாக கட்­ட­மைப்பு என்ற ஒன்று இல்லை. மாறாக இரா­ணுவ கட்­ட­மைப்பே நில­வு­கி­றது. பாலர் பாட­சா­லை­களின் ஆசி­ரியர் நிய­மனம் முதல் சிகை அலங்­கார கடைகள் வரை அனைத்தும் இரா­ணுவ மய­மா­கி­விட்­டது. இன்று ஊடக கற்கை நெறி­களை கூட வடக்கில் இரா­ணுவம் நடத்­து­கி­றது. இந்த நிலை மாற வேண்டும். சிவில் நிர்­வா­கத்தில் இரா­ணுவம் தலை­யி­டு­வ­தனை முற்­றாக தடை செய்ய வேண்டும்.

முப்­ப­டை­களை வெளி­யேற்றி மக்­களை அவர்­க­ளது சொந்த இடங்­களில் குடி­யேற்ற முடி­யுமா?

எந்­த­வித குற்­ற­செ­ய­லிலும் ஈடு­ப­டாமல் 10, 15 வரு­டங்­க­ளாக சிறை­வாசம் அனு­ப­விக்கும் தமிழ் அர­சியல் கைதி­களை பொது­மன்­னிப்பு வழங்கி விடு­தலை செய்ய முடி­யுமா?
இனப் பிரச்­சினை தீர்வு தொடர்பில் எமக்கு தெளி­வாக கூற வேண்டும். நாம் பிரே­ம­தாஸ காலத்­தி­லி­ருந்து மஹிந்த ராஜபக்ஷவின் அர­சாங்கம் வரை பேச்­சு­வார்த்தை நடாத்தி நம்­பிக்கை இழந்­துள்ளோம்.

முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான பிரே­ம­தாஸ சந்­தி­ரக்கா பண்­டா­ர­நா­யக்க குமார துங்க மற்றும் தற்­போ­தைய மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்­துடன் 18 முறை பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட்டோம். அனை­வ­ருமே தீர்வு திட்­டங்கள் தொடர்பில் பேசி­னார்கள். ஆனால், எத­னையும் நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை. எனவே இது தொடர்பில் எமக்கு தெளி­வான ஒரு பதிலை வழங்க வேண்டும்.

யுத்தம் முடி­வுற்ற பின்னர் நாம் பாரிய அளவில் பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­கின்றோம். எமது வழி­பாட்டு தலங்கள் கூட உடைக்­கப்­ப­டு­கின்­றன. பள்­ளி­யிலோ கோயி­லிலோ வழி­பா­டுகள் நடத்த முடி­யாத நிலையில் நாம் மிகவும் பாதிக்­கப்­பட்­டுள்ளோம். எனவே, இனியும் முட்­டாள்­க­ளா­கவே இருக்க முடி­யாது.

கொழும்­பிற்கு ஊடக பயிற்சி பெற வந்த எமது மாண­வர்கள் தாக்­கப்­பட்­டனர். ஆனால், இன்று வடக்கில் இரா­ணுவம் ஊடாக கற்கை பயிற்­சி­களை வழங்­கு­கி­றது. இந்த இரா­ணு­வ­ம­ய­மாக்கம் பெரும் அச்­சத்­தினை ஏற்­ப­டுத்­து­கி­றது. இது வடக்­கிற்கு மட்டும் அல்ல முழு நாட்­டிற்கும் தெற்­கிற்கும் ஆபத்­தா­னது.

இன்றைய சூழ்நிலையில் மிகவும் துர்பாக்கிய நிலையில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். ஒரு நிலையான தீர்வு வேண்டும். எனவே மேற்கூறிய விடயங்கள் தொடர்பில் எமது எதிர்பார்ப்பு உள்ளது. எமது இக்கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாட்டினை எதிர்பார்க்கின்றோம் பிரதானமாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இது தொடர்பில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply