நிறைவேற்று அதிகாரம் என்னிடம் இருந்தாலும்’ தீர்மானம் எடுக்கும் பொறுப்பை பாராளுமன்றத்திடமே ஒப்படைத்துள்ளேன் :மஹிந்த ராஜபக்ஷ
நாட்டை மீட்பதற்கும் மக்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்குமே நான் நிறைவேற்று ஜனாதிபதி முறையை பாவித்துள்ளேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசியலமைப்பை மாற்றுவதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமித்து அதற்கு பச்சை சமிஞ்சை காட்டியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இவற்றைக் கருத்திற் கொள்ளாது எதிர்க்கட்சி மக்களை திசை திருப்பும் வகையில் அநாவசியமான பிரசாரங்களில் இடுபட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.விவசாய அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் 5000 ற்கும் மேற்பட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற விவசாய மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கண்டி கன்னொருவ விவசாயப் பண்ணையில் நடைபெற்றது.
பிரதம டி.எம். ஜயரத்ன, அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன, மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க பிரதியமைச்சர் அப்துல் காதர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி நாம் அரசியலமைப்பை மாற்றுவதற்கு பாராளுமன்ற தெரிவுக் குழு ஒன்றை நியமித்துள்ளோம். ஒரு வருடமாக அது செயற்படுகிறது. சாட்சிகளும் அங்கு பதிவாக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நாம் இருந்தாலும் அதற்கான தீர்மானம் எடுக்கும் பொறுப்பை பாராளுமன்றத்துக் வழங்கியுள்ளேன். அத் தெரிவுக்குழு முன்னிலையில் தமது கருத்துக்களை முன்வைக்காத ஐ.தே.க. நிறைவேற்று
அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்குமாறு மக்கள் முன் மேடைகளில் விமர்சித்து வருகின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒத்து ழைப்பு இல்லாமல் இந்த தெரிவுக்குழுவில் பயனில்லை என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்த தெரிவுக்குழுவில் கருத்துக்களை முன்வைக்குமாறு தாம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வேண்டுகோள் விடுத்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக் குழுவை நியமித்து தெளிவான வேலைத் திட்டத்தை முன்னெடுக்கையில் மக்கள் முன்னிலையில் எதிர்க்கட்சி தமது வேறு முகத்தைக் காட்டி வருகிறது. இதன் மூலம் மக்களிடம் வேறு கருத்துக்களை முன்வைத்து வருகிறது. தமிழ்க் கூட்டமைப்பில் 22 உறுப்பினர்கள் உள்ள தால் ஸ்திர மற்றதாக அரசங்கம் மாறும் நாட்டின் முன்னேற்றம் தடைப் படும் என்று தெரிவிக்கின்றனர்.
இவற்றை சாட்சி யமாக தெரிவுக்குழு முன் சமர்பித்துள்ளனர். நேற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேடை யொன்றில் பேசும் போது நிறைவேற்று அதிகாரம் பற்றி பேசினார். நான் அவரி டம் ஏற்கனவே கூறியுள்ளேன். தெரிவுக் குழுவில் கருத்துக்களை முன்வைக்கும் படி எனினும் அதை அவர் செய்ய வில் லை. அரசியலமைப்பு ஒரு சஞ்சிகை யல்ல; நினைத்த போது அதை மாற்றுவதற்கு எவரும் நினைத்ததும் அதனை மாற்ற முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply