மோடி பங்கேற்ற ஆஸ்திரேலியா நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட இந்திய வரைப்படத்தில் காஷ்மீரை காணவில்லை

ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக மியான்மரில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, முதல் நிகழ்ச்சியாக இன்று பிரிஸ்பேன் நகரில் உள்ள குவீன்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்குள்ள பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடிய மோடி, அங்கு வைக்கப்பட்டிருந்த படக் கண்காட்சியை பார்வையிட்டார்.

அப்போது, அங்கிருந்த இந்திய வரைப்படத்தில் காஷ்மீர் மாநிலம் இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இந்த தவறை உணர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இந்திய அதிகாரிகளிடம் வருத்தம் தெரிவித்ததாக இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அக்பருதீன் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply