பிரச்சினைகளுக்கு யதார்த்தத்துடன் தீர்வு காணக்கூடியவர் ஜனாதிபதி ஈ. பி. டி. பி. ஜனாதிபதியையே ஆதரிக்கும்

யார் பிரச்சினையைத் தீர்த்துவைப்பாரோ அல்லது யார் அதிகாரத்துக்கு வந்தால் பிரச்சினைகள் தீர்க்கப்படுமோ அவருக்கே ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிக்க முடிவுசெய்திருப்பதாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை. யார் பிரச்சினையை தீர்த்தவர்களோ, யாருக்குப் பிரச்சினையைத் தீர்க்க முடியுமோ யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ, யாரால் அதிகாரத்துக்கு வரமுடியுமோ அவருக்கே நாம் ஆதரவளிப்போம்.அந்த வகையில் தற்போது அதிகாரத்தி லிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே இதனைச் செய்ய முடியும் என்பதால் அவருக்கே ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிக்கவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழ் ஊடகங்களின் பிரதிநிதிகளுடனான விசேட சந்திப்பின்போதே அமைச்சர் இந்தக் கருத்துகளை வெளியிட்டார். அதிகாரத்துக்கு வரமுடியாதவர்களுடன் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது பயனற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினூடாக பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து தீர்வை நோக்கிக் கொண்டு செல்லவேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனக் குறிப்பிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதனை மேலும் செழுமைப்படுத்துவதற்கு நாடாளுமன்றத் தெரிவிக்குழுவைப் பயன்படுத்துவதே சரியானதாக இருக்கும் என்றும் கூறினார்.

கடந்த காலங்களில் பல குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் மூத்த தமிழ் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். அவற்றால், எதுவித பயன்களும் ஏற் படவில்லை. இலங்கை – இந்திய ஒப் பந்தம் எமது பிரச்சினைத் தீர்வுக்கு ஒரு பொன்னான காலம் என நாம் அன்று தொட்டே சொல்லிவந்தோம். அதனை நாம் ஏற்றுக்கொண்டிருந்தால் சுயநிர்ணய உரிமையைக் கூடப் பெற்றிருக்க முடியும். ஆனால் நல்ல சந்தர்ப்பங்கள் நழு வவிடப்பட்டுவிட்டன.

தமிழர் தரப்பில் சரியான அணுகுமுறை இன்மையே இதற்குக் காரணம். சில அரசியல் தலைவர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களைத் தமது சுயலாப அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்திக்கொண் டனர். 13வது திருத்தச் சட்ட மூலத்தை தொட்டுக்கூடப் பார்க்கமாட்டோம் என்று கூறியவர்கள் 2013ஆம் ஆண்டு வடமாகாண சபைத் தேர்தலில் வந்து இணைந்து கொண்டனர். எம்மிடம் அதிகாரம் வந்துவிட்டால் நாம் பிரச்சி னையைத் தீர்த்துவிடுவோம் என்ற அச்சத்திலேயே அவர்கள் வந்து இணைந்தனர்.

வடமாகாணசபையில் அதிகாரத்துக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள போதும் அதன் செயற்பாடுகள் முடங்கியே காணப்படுகின்ற அக்கறை இல்லாத ஆற்றல் இல்லாதவர்களாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. வட மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவழிக்கப்படா மையால் நிதி திரும்பிச் செல்லப்போகிறது என்று நாம் கூறினோம். முதலில் காசு இல்லையெனக் கூறினர். பின்னர் அதிகாரம் இல்லையெனக் கூறினர். மாறிமாறிக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இரணைமடு குடிநீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு பல மில்லியன் ரூபா கடனைப் பெற்றுள்ளது. எனினும், வடமாகாணசபையினர் தமக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தியே அதனைத் தடுத்துவைத்துள்ளனர். அதிகாரம் இருப் பதாலேயே அவர்களால் தடுக்க முடிந் துள்ளது. எனவே அதிகாரம் இல்லையெனக் கூறுவது முற்றிலும் தவறானது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்குச் சென்றுள்ள வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊடக மொன்றுக்கு வழங்கிய செவ்வியில் வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாகவும், பெண்கள் வீதியில் கூட இறங்க முடியாத சூழல் இருப்பதாக வும் கூறியுள்ளார். அவ்வாறானதொரு நிலை அங்கு இல்லை. உண்மைக்குப் புறம்பான தகவல்களையே அவர் வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply