பொதுவேட்பாளர்களாக மூன்று பெண்களை சிபாரிசு செய்த அஸ்வர் எம். பி.

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் களாக இரண்டு பெண் எம்.பிக்கள் உட்பட மூன்று பெண்களை ஏ.எச்.எம்.அஸ்வர் எம்.பி நேற்று சபையில் பிரேரித்தார். ஊடகத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தப் பெயர்களை பிரேரித்தார். எதிர்க்கட்சியினர் இப்போது பொது வேட்பாளர்களைத் தேடி அலைகின்றனர். நீங்கள் இவ்வாறு அலையவேண்டியதில்லை. நானே மூன்று பெயரைத் தெரிவுசெய்து தருகிறேன் என்றார். அஸ்வர் எம்.பி தொடர்ந்தும் பேசும்போது, பொது அபேட்சகர் யார் என்று கேட்டதும் கரு ஜெயசூரிய குழம்புகிறார். ஏன் குழம்ப வேண்டும்.நாட்டு மக்கள் அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். சந்திரிக்காவை பொது வேட்பாளராகத் தெரிவுசெய்யவுள்ளதாக பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இதனைத்தான் கேட்டேன். பொது வேட்பாளர்கள் இல்லையென்றால் நான் இங்கு மூன்று பெயரைத் தெரிவுசெய்து கொடுக்கிறேன். ரோசி சேனாநாயக்கவை பொது வேட்பாளராக்குங்கள். அடுத்தது அஞ்சான் உம்மாவை பொது வேட் பாளராக்குங்கள்.

அடுத்ததாக விஜயகலா மகேஸ் வரனை பொது வேட்பாளராக்குங்கள். இவர்கள் மூன்று பேரும் சிறந்தவர்கள். இவர்களையே தெரிவுசெய்து கொடுக்கி றேன் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply