கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு ஆதரவளித்தால் நிபந்தனைகளை வெற்றி கொள்ள முடியும் :பிரபா கணேசன்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆகவே, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியை ஆதரிப்பதன் மூலம் இராணுவ பிரசன்னக்குறைப்பு வடமாகாண சபைக்கான அதிகாரம் காணி மீள் பெறுகை உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிபந்தனையாக முன்வைத்து அவற்றை வெற்றி கொள்ள முடியும் என்று பிரதியமைச்சர் பிரபா கணேசன் நேற்று சபையில் தெரிவித்தார். அமெரிக்காவிடமோ அல்லது ஜரோப்பாவிடமோ தீர்வுகள் இல்லை. தமிழ் மக்களுக்கான தீர்வு ஜனாதிபதியிடமே இருக்கிறது என்றும் அவர் கூறினார்.பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் வீடமைப்பு நிர்மாண பொறியியல் துறை அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதியமைச்சர் பிரபா கணேசன் இங்கு மேலும் கூறுகையில்;
ஜனாதிபதி மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்ற தீர்ப்பின் ஊடாக நாம் அதிர்ஷ்டசாலிகளாகியுள்ளோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.
ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தற்போது நல்ல சந்தர்ப்பம் கிட்டியிருக்கிறது.
அமெரிக்கா ஐரோப்பா செல்வதில் எந்தத்தீர்வும் கிடைத்துவிடாது என்பதையும் ஜனாதிபதியிடமே தீர்வு இருக்கிறது என்பதையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே முன்வைத்து வருகின்றதான இராணுவப் பிரசன்ன குறைப்பு காணி மீள்பெறுகை மற்றும் வடமாகாண சபைக்கான அதிகாரம் உள்ளிட்ட விடயங்களை நிபந்தனைகளாக முன்வைத்து ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதன் மூலம் தாங்கள் வெற்றிடைய முடியும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply