எல்.ரீ.ரீக்கு நிதியளித்தமை பற்றி நோர்வே விசாரணை செய்ய வேண்டும்: ஜனாதிபதி

இலங்கையில் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற உள்நாட்டுப் போரின்போது, விடுதலைப் புலிகளுக்கு அப்போதைய நோர்வே அரசு நிதியுதவி அளித்து வந்தமை தொடர்பாக, அந் நாட்டு அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடமேல் மாகாணத்தின் குருநாகல் நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.மேலும் நோர்வே அரசாங்கம் எவ்வாறு தீவிரவாதிகளுக்கு நிதியளித்தார்கள் என்பது தொடர்பில் ஆதாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக நோர்வேயின் அமைச்சர் மற்றும் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹேம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்ததாக அவர் குற்றம் சுமத்தினார்.

மேலும் சொல்ஹேம் தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை்கு எதிராக ஆதாரங்களைக் கொடுப்பதற்குத் திட்டமிட்டு வருகிறார் எனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply