கே.வி. பள்ளிகளில் இருந்து ஜெர்மன் நீக்கம்: மறுபரிசீலனை செய்யுமாறு மோடியிடம் ஏஞ்சலா மெர்க்கல் கோரிக்கை

மத்திய அரசின் கண்காணிப்பில் இயங்கிவரும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் இருந்து ஜெர்மன் மொழியை நீக்கிய நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் கோரிக்கை வைத்துள்ளார். மத்திய அரசின் கண்காணிப்பு மற்றும் நிர்வாகத்தின்கீழ் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ‘கேந்திர வித்யாலயா’ பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இப்பள்ளியில் பயிற்று மொழியாக ஆங்கிலமும், தாய்மொழியாக இந்தியும், மூன்றாவது (விருப்ப) மொழியாக ஜெர்மனும் இருந்து வருகின்றன.

இப்பள்ளிகளில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் மூன்றாவது மொழியாக இருக்கும் ஜெர்மன் மொழியை நீக்கிவீட்டு, இனி சமஸ்கிருதத்தை மூன்றாம் மொழியாக சேர்ப்பது என மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

இந்த புதிய முடிவினால் நாடெங்கிலும் உள்ள சுமார் 500 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8 வகுப்புக்கிடையிலான சுமார் 70 ஆயிரம் மாணவ-மாணவிகள் சிரமத்துக்குள்ளாக நேரிடும் என அவர்களது பெற்றோர் கருதுகின்றனர்.

இந்நிலையில், ஜி௨0 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இன்று சந்தித்தார்.

இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக மோடியுடன் ஆலோசனை நடத்திய அவர், கேந்திர வித்யாலயா பள்ளியின் பாடத்திட்டத்தில் இருந்து ஜெர்மானிய மொழி நீக்கப்பட்டதாக சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்திய அரசின் அறிவிப்பை சுட்டிக்காட்டி, இந்த முடிவை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, ‘தனிப்பட்ட முறையில் நானே, இந்தியக் குழந்தைகள் பிறநாட்டு மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கை உடையவன். உங்களது கோரிக்கை தொடர்பாக இந்திய முறைக்கு ஏற்ப ஆலோசித்து, பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்’ என்று உறுதியளித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply