கொழும்பு பாதுகாப்புக்கு சுமார் 09 மில்லியன் ரூபா செலவில் புதிதாக சீ.சீ.ரீ.வி. கெமெராக்கள் பொருத்த பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை
கொழும்பில் தற்போது பொருத்தப்பட்டிருக்கும் சீ.சீ.ரீ.வி. கமராக்களுக்கு மேலதிகமாக சுமார் 09 மில்லியன் ரூபா செலவில் புதிதாக இரண்டு சீ.சீ.ரீ.வி. கமராக்களைப் பொருத்த பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொலிஸ் ரோந்து வாகனங்களில் ஜி.பி.எஸ். என்னும் கட்டமைப்பினை உள்வாங்கவும் பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருப்பதாக பொலிஸ் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இவ்வருட இறுதிக்குள் தெமட்டகொடை, ஊருகொடவத்தை, கொழும்பு வெலிக்கட சிறைச்சாலை உள்ளிட்ட பகுதிகளை தெளிவாக கண்காணிக்கும் வகையிலும் பழைய பாராளுமன்ற சுற்று வட்டாரத்திலிருந்து காலிமுகத்திடல் சுற்று வட்டாரம் வரையிலும் தெளிவாக படம்பிடித்துக் காட்டக்கூடிய விதத்திலுமாக இரண்டு சீ.சீ.ரீ.வி. கமராக்கள் பொருத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply