சீனாவில் உணவு உற்பத்தி கூடத்தில் பயங்கர தீ விபத்து: 18 பேர் பலி

சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள உணவு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 18 பேர் பலியானார்கள். அம்மாகாணத்திற்குட்பட்ட ஷவ்குவாங் நகரில் உள்ள லாங்யுவான் உணவு நிறுவனத்தின், உற்பத்திக்கூடம் நேற்றிரவு 7 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இத்தீவிபத்தில் சிக்கி 18 பேர் பலியான நிலையில் மேலும் 13 பேர் காயமடைந்ததாக தெரிகிறது. காயமடைந்த அனைவருக்கும் அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தீ விபத்து ஏற்பட்ட நிறுவனத்தின் மேலாளர்களை காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்து வருகின்றனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply