அமெரிக்க பிணைக்கைதி கொலை: ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு அதிபர் ஒபாமா கண்டனம்

சிரியாவில் சமூக சேவை தொண்டு ஊழியராக பணியாற்றிய பீட்டர் எட்வர்டு காசிக் (26) என்பவரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்தி சென்று சிறை வைத்திருந்தனர். அவரது தலையை துண்டித்து படுகொலை செய்தனர். அந்த வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. அதில் பேசிய தீவிரவாதி. இவர் தான் பீட்டர் எட்வர்டு காசிக். அவர் உங்களது அமெரிக்காவின் குடிமகன். தபிக் நகரில் அமெரிக்காவின் முதல் சிலுவைப்போர் வீரரான இவரை (பீட்டர் காசிக்) கொன்று புதைக்கிறோம். அதிபர் ஒபாமா சிரியாவுக்கு மேலும் அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்ப வேண்டும். அவர்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்’’ என ஆணவத்துடன் பேசினான்.இதற்கிடையே ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடந்த ஜி20 நாடுகள் தலைவர்களின் உச்சி மாநாட்டில் இருந்து அமெரிக்கா திரும்பிய அதிபர் ஒபாமாவுக்கு இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டது.

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அவர் தீவிரவாதிகன் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காசிக் மனிதாபிமானம் மிக்கவர். தீவிரவாதிகளின் இச்செயல் மிகவும் கொடூரமானது. மனித தன்மையற்ற இச்செயலை உலகம் ஏற்றுக் கொள்ளாது’’ என்றார்.

காசிக்கின் பெற்றோர் எட்–பவுலா இண்டியானாவை சேர்ந்தவர்கள். இவர்கள் வருத்த செய்தியில் எங்களது மகன் காசிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பிளக்கிறது. ஆனால் அவன் இறுதிவரை மனிதாபிமானத்துடன் வாழ்ந்தான் என நினைக்கும் போது பெருமைப்படுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

பீட்டர் எட்வர்டு காசிக் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட 5–வது பிணைக்கைதி ஆவார். இதற்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகை நிருபர்கள் ஜேம்ஸ் போலே, ஸ்டீவன் சாட்லோப், இங்கிலாந்தை சேர்ந்த ஆலன் ஹென்னிங், டேவிட் ஹெய்ன்ஸ் ஆகிய 4 பேர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply