ஒழுங்கு முறையற்ற ஐ.நா.விசாரணை தொடர்பில் இலங்கை அதிருப்தி ; காலநீடிப்புக்கும் விசனம்

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலய அலுவலகம் இலங்கை மீது நடத்தும் விசாரணை தொழில்சாரா முறையில் நடத்தப்படுவது குறித்து இலங்கை தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. வெளி உறவுகள் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் ஐக்கிய நாடுகள் வதிவிட இணைப்பாளரை சந்தித்து இது பற்றித் தெரிவித்தார். விசாரணை தொடர்பான வாக்குமூலங்களைச் சமர்ப்பிக்கும் காலக்கெடுவானது உத்தியோகபூர்வமற்ற முறையில் மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பாக அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்தார். இத்திகதி மாற்றப்பட்டு மீண்டும் திருத்தி அமைக்கப்பட்டது.இணையத் தளத்தில் காலக்கெடு அக்டோபர் 30 எனத் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் உள்ளூர் பத்திரிகை ஒன்றினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில் இத்திகதி அக்டோபர் 30 ஆகும். அது நீடிக்கப்பட மாட்டாதெனத் தெரிவித்திருந்தார்.

வெற்றுத் தாள்களில் ஒப்பமிடப்பட்டு இலங்கைக்கு எதிராக இட்டுக்கட்டப்பட்ட சாட்சிகளைப் பெற முயன்றுள்ளமை குறித்தும் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த விவகாரத்தில் பிரதம முகவராகச் செயற்பட்டவர் கைது செய்யப்பட்டார். மற்றவர் சட்டவிரோதமாக நாட்டை விட்டுச் சென்றதாக அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply