கோவா விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்தது: 164 பயணிகள் உயிர் தப்பினர்
கோவாவிலிருந்து மும்பை வழியாக டெல்லி செல்லவிருந்த விமானத்தின் டயர் வெடித்தால் அதன் பயணம் ரத்து செய்யப்பட்டது. இன்று காலை கோவாவிலுள்ள டபோலிம் விமான நிலையத்தில் டெல்லி செல்லும் ஏ.ஐ. 866. என்ற ஏர்-இந்தியா விமானத்தில் 164 பயணிகள் அமர்ந்திருந்தனர். இந்நிலையில் விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதன் டயர் வெடித்தது. இதனால் பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த கோவா விமான நிலைய இயக்குனர் கே.எஸ். ராவ், விமானத்தின் மீது பறவை மோதியதாக தனக்கு தகவல் வந்ததாக கூறினார். அதே சமயம் இரு சம்பவங்களும் நடைபெற்றதை ஏர்-இந்தியா, மும்பை செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியதுடன் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்தார்.
ஒரு சில பயணிகளுக்கு ஓட்டலில் தங்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு தங்க மறுத்த பயணிகள் இன்று மதியம் புறப்படும் ஏர்-இந்தியா விமானத்தில் அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply