தீவிரவாத தாக்குதல்கள் அதிகம் நடைபெறும் நாடுகள் பட்டியல்: பாகிஸ்தானுக்கு 3-வது இடம்

உலகளவில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறும் நாடுகளின் பட்டியலை லண்டனை சேர்ந்த பொருளாதாரம் மற்றும் சமாதான இன்ஸ்டிடியூட் தொகுத்து வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உலகிலேயே அதிகளவு தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறும் நாடுகளில் முதலிடத்தை ஈராக் பிடித்துள்ளது. அங்கு 2 ஆயிரத்து 492 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. அதில் 6 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஆப்கானிஸ்தானும், மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன. 4-வது, 5-வது இடம் முறையே நைஜீரியாவுக்கும், சிரியாவுக்கும் கிடைத்துள்ளது.

2013-ம் ஆண்டில் உலகளவில் 10 ஆயிரம் தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழப்பு 37 சதவீதம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத இயக்கம் 2000௨013 இடையே 778 தாக்குதல்கள் நடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளது. அவற்றில் 12 சதவீத தாக்குதல்கள் தற்கொலைப்படை தாக்குதல்கள் ஆகும். உலகளவில் அதிக எண்ணிக்கையில் தீவிரவாதிகளை கொண்ட அமைப்பாக தலிபான் திகழ்கிறது. இதில் 36 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரையிலான வீரர்கள் இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply