விடுதலை செய்யபட்ட 5 தமிழக மீனவர்கள் டெல்லி வருகை பிரதமர் மோடியுடன் சந்திப்பு

கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி, கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இவர்களை, போதைப்பொருள் கடத்தியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்களுடன் இலங்கையைச் சேர்ந்த மேலும் 3 பேரும் கைது ஆனார்கள். கொழும்பு நகரில் உள்ள வெலிக்கடை சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டனர்.இவர்கள் மீதான வழக்கை விசாரித்த கொழும்பு ஐகோர்ட்டு, 8 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கடந்த அக்டோபர் 30-ந் தேதி தீர்ப்பு கூறியது.இது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மீனவர்கள் போராட்டத்தில் குதித்தார்கள். தமிழக மீனவர்கள் 5 பேரையும் மீட்கக் கோரி தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தின.

இதைத்தொடர்ந்து, 5 மீனவர்களையும் மீட்பது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். இதற்கிடையே, தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து கொழும்பு நகரில் உள்ள இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் இந்திய அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஆனால் இந்த அப்பீல் வழக்கு நடைபெறுவதை விரும்பாத அதிபர் ராஜபக்சே, தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கி 5 மீனவர்களையும் விடுதலை செய்ய விருப்பம் தெரிவித்தார். பொதுமன்னிப்பு வழங்குவதற்கு வசதியாக இந்திய அரசு தனது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதன்பேரில், இந்திய தூதரகத்தின் சார்பில் இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மேல்முறையீட்டு மனு நேற்று முன்தினம் வாபஸ் பெறப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அதிபர் ராஜபக்சே நேற்று தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ததோடு, பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்தார். இதற்கான அறிவிப்பை ராஜபக்சே வெளியிட்டு இருப்பதாக அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் மோகன் சமரநாயகே தெரிவித்தார்.

இதே போல் தமிழக மீனவர்களுடன் கைதான இலங்கை மீனவர்கள் 3 பேரும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

பின்னர் இந்த தகவல் கொழும்பு வெலிக்கடை சிறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 பேரையும் சிறையில் இருந்து அவர்கள் விடுதலை செய்தனர். 5 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு குடியுரிமை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்பிறகு 5 பேரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, இந்திய தூதரகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இரவில் அவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டனர்அவர்களை இந்திய தூதரக அதிகாரிகளிடம் இலங்கை அரசு ஒப்படைத் தது. இந்திய தூதரகம் வந்த மீனவர்களை    தங்களது குடும்பத்தினரிடம்  உடன டியாக பேச இந்திய தூதரக அதிகாரிகள் ஏற்பாடு செய் தனர். மீனவர்கள் தங்களது குடும்பத்தினரிடம் போனில் பேசி தாங்கள் விடுதலையான செய் தியை ஆனந்த கண்ணீருடன் தெரி வித்தனர். இதை கேட்டதும் குடும்பதினர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மீனவர்களை விமானம் மூலம் தமிழகம் அழைத்துவர இந்திய தூதர கம்   ஏற்பாடு  செய்தது. இன்று காலை கொழும்பு விமான நிலை யத்தில் இருந்து திருச்சிக்கு மீனவர்களை அழைத்துவர அதிகாரிகள் முடிவு செய்த னர். இதையடுத்து கொழும்பு விமான நிலையத்திற்கு மீனவர்கள் 5 பேரும் இன்று காலை அழைத்து வரப்பட்ட னர்.

காலையில்  கொழும்பில் இருந்து புறப்பட்ட  விமானத் தில்  இடம் இல்லாததால்  மதியம்   2.30  மணிக்கு   புறப்படும் விமானத்தில் அவர்கள் திருச்சி வருவார்கள் என கூறபட்டது ஆனால் அவர்கள் இன்று மாலை டெல்லி விமான ,நிலையம் வருகிறார்கள். அங்கு வெளியுறவுத்துறை  அமைச்சர்  சுஷ்மிதா சுவராஜை சந்திக்கின்றனர். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விட்டு மாலை  தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply