மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் மஹிந்தராஜபக்ஷ
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதித்தேர்தல், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கும் என்று அவரது அரசு கடந்தமாதம் அறிவித்திருந்த பின்னணியில் இன்றைய அறிவிப்பு வந்திருக்கிறது.ஒருவர் இலங்கை ஜனாதிபதியாக இரண்டுமுறை மட்டுமே போட்டியிட முடியும் என்கிற முந்தைய தடையை நீக்கும் இலங்கை அரசியல் சட்டத்திருத்தம் சரியானதே என்றும், அந்த சட்டத்திருத்தத்தின்படி இரண்டாவது முறையாக அதிபர் பதவி வகித்துவரும் மஹிந்தராஜபக்ஷ மூன்றாவது முறையாகவும் அந்த பதவிக்கு போட்டியிடலாம் என்றும் இலங்கையின் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
இலங்கையின் நீண்டநாட்கள் நீடித்த உள்நாட்டுப்போரை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்தவர் மஹிந்த ராஜபக்ஷ என்கிற பரவலான கருத்தாக்கம் இலங்கையின் பெரும்பான்மை சிங்களர்களிடம் அவருக்கான ஆதரவு நிலையை தோற்றுவித்திருந்ததாக கூறப்படுகிறது.
அதேசமயம், அவர் சர்வாதிகாரியாக நடந்துகொள்வதாகவும் எதிர்தரப்பாரை ஒடுக்குபவராகவும் அவரது விமர்சகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply