பிரான்ஸ் மீது தாக்குதல் நடத்துவோம்: ஐ.எஸ்.தீவிரவாதிகள் மிரட்டல்

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது அமெரிக்கா ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இவர்களுக்கு ஆதரவாக இங்கிலாந்து மற்றும் பிரான்சும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மேற்கத்திய நாடுகள் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். தாங்கள் பிடித்து வைத்த அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த 4 பிணைக் கைதிகளின் தலை துண்டித்து படுகொலை செய்தனர்.சமீபத்தில் தலை துண்டித்து கொல்லப்பட்ட அமெரிக்க பிணைக்கைதி பீட்டர் காசிக் வீடியோ காட்சியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மைக்கேல் தாஸ் சான்டோஸ் மற்றும் மாஸிம் ஹவுட்சர்டு ஆகியோர் கத்தியுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, ஐ.எஸ்.தீவிரவாதிகள் குருப்பில் பிரான்சை சேர்ந்தவர்கள் இணைந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புடன் இணைந்த ‘அல் ஹயாத் மீடியா சென்டர்’ சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டது.

7 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில் பிரான்சை சேர்ந்த பல தீவிரவாதிகள் தங்களது பாஸ்போர்ட்டை எரிக்கின்றனர். பின்னர் அவர்களில் 3 பேர் பேசுகின்றனர்.

பிரான்ஸ் மீது தாக்குதல் நடத்துங்கள் அல்லது ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பில் சேர்ந்து ஈராக் மற்றும் சிரியாவில் போரிடுங்கள் என அழைப்பு விடுக்கின்றனர்.

இதற்கு முன்பு வெளியிடப்பட்ட வீடியோக்களில் தீவிரவாதிகள் முகத்தை மூடியபடி பேசியுள்ளனர். ஆனால் சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய வீடியோவில் முகத்தை மூடாமல் பகிரங்கமாக துணுச்சலுடன் பேசினர். தங்களின் பிரான்ஸ் பாஸ்போர்ட்டுகளை தீயிட்டு எரித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply