மைத்திரி, துமிந்த, குணவர்த்தன சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கம்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ள பொது வேட்பாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான ராஜித்த சேனரத்ன துமிந்த திஸாநாயக்க மற்றும் எம்.கே.டி.எஸ்.குணவர்தன ஆகியோர் அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதுமாத்திரமன்றி மைத்திரிபால சிறிசேன, துமிந்த திஸாநாயக்க மற்றும் எம்.கே.டி.எஸ்.குணவர்தன ஆகியோரை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு கட்சி தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ நேற்று மாலை தீர்மானித்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் 08 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நேற்று பிற்பகல் 3.30 அளவில் அரசாங்கத்திலிருந்தும் அமைச்சர் பதவியிலிருந்தும் தான் விலகியதை உறுதிப்படுத்தியிருந்தார்.
பொதுவேட்பாளராக களமிறங்கவுள்ள மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டதையடுத்தே ஏனையோரின் பதவி நிலைகளும் கட்சி உறுப்புரிமைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply