ஜனாதிபதியின் வெற்றியை உறுதி செய்த மாபியா கும்பலின் வெளியேற்றம்

நாட்டு மக்களுக்கு குறைந்த விலையில் அரிசியை வழங்குவ தற்கும் குறைந்த விலை யில் மீனை வழங்கு வதற்கும் முட்டுக்கட்டையாக இருந்த மாபியா கும்பல் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்திருப்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு மேலும் சக்தியையும் வலுவையும் அளிப்பதாக இராஜதந்திரிகள் தெரிவிக்கின்றனர். மேற்குலக சக்திகள் மேற்கொண்ட சதியின் விளைவாக அரச சார்பற்ற நிறுவனங்களின் டொலரின் மூலம் எதிர்க்கட்சிக்கு இந்த மோசடிக் கும்பல் இணைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எந்தப் பொது வேட்பாளர் வந்தாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாதெனவும் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவன்ஸ, சுசில் பிரேம ஜயந்த ஆகியோர் தெரிவிக்கின்றனர். எவர் கட்சி மாறினாலும் வேறு பக்கம் சாய்ந்தாலும் இறுதி வெற்றி பெற்று திகழப்போவது எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன்.

இவ்வாறு அமைச்சர் நிமல் தெரிவித்தார்.

சூழ்ச்சி, கொலை போன்றவற்றிற்கு முகம் கொடுத்து அவைகளை முறியடித்து வெற்றி கொள்வது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டு முன்னணிக்கு பழக்கப்பட்டது நாம் அதற்கு அஞ்சவும் மாட்டோம் என்று கட்சியின் செயலர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் வார்த்தைக்கு மயங்கி, பொது அபேட்சகராக களமிறங்கியுள்ள மைத்திரிபால சிரிசேன இறுதியாக தோல்வியை சுருட்டிக்கொண்டு வீடு போய்ச் சேர்வார் என்றும், இதனால் நாட்டின் அபிவிருத்தியை பின்னோக்கி இட்டுச் செல்லாது என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply