சர்வதேச உதவி விடுதலைப் புலிகளின் தலைவர்களை தப்பிக்கவைப்பதற்கான முயற்சியாக இருக்கலாம்:விமல் வீரவன்ச
விடுதலைப் புலிகளுக்கு உதவுவதற்காகவே இந்தியாவும், அமெரிக்காவும் இலங்கைக்கு உதவ முன்வந்திருப்பதாக தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இந்திய வைத்தியர்கள் குழுவும், வன்னியிலுள்ள மக்களை வெளியேற்ற முன்வைத்திருக்கும் அமெரிக்க இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளுக்கு உதவிசெய்யும் நோக்கில் இலங்கைக்கு வந்திருக்கலாம் எஎன அவர் குற்றஞ்சாட்டினார்.
“யார் அவர்கள், அவர்களின் கப்பல்களில் என்னத்தை மறைத்துச் செல்கிறார்கள் என்பது பற்றி யாருக்கும் தெரியாது. கடற்படையோ அல்லது இலங்கை அரசாங்கமோ அதனைக் கண்டறிய முடியாது” என மக்களை வெளியேற்ற அமெரிக்கா முன்வந்திருப்பது குறித்து விமல் வீரவன்ச கூறினார்.
விடுதலைப் புலிகளின் தலைவர்களை தப்பிக்கவைப்பதற்கான முயற்சியாக இது இருக்கலாமெனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
அதேநேரம், இலங்கைக்கு அனுப்பப்பட்டிருக்கும் இந்திய வைத்தியக் குழுவில் இந்தியாவின் உளவுப் பிரிவான ரோவுடன் தொடர்புபட்டவர்களும் உள்ளடங்கியிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இதனால், இலங்கையின் களநிலைவரம் குறித்தும், வெளிநாடுகளின் உதவிகள் குறித்தும் இலங்கை அரசாங்கம் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டுமென விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, வன்னியில் சிக்குண்டிருக்கும் மக்களை மீட்பதற்கு அமெரிக்கா உட்பட எந்தவொரு நாட்டிடமும் இராணுவ உதவி கோரவில்லையென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எந்தவிதமான உதவி, தேவை என்பது குறித்து தாம் சர்வதேச நாடுகளுக்கு அறிவித்திருப்பதாகவும், அந்த வகையில் மனிதாபிமான உதவிகள் தொடர்பில் சர்வதேச நாடுகளிடமிருந்து யோசனைகள் வருமிடத்து அது பற்றித் தீர்மானிக்கப்படுமெனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகம கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபை வகுத்திருக்கும் முறைக்கு ஏற்பவே வன்னியிலுள்ள மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 13வது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைய இனப்பிரச்சினைக்குத் தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்க அரசாங்கம் தயாராகவிருப்பதாகவும்,
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply