யுத்த சூனிய பிரதேச மக்களை மீட்கும் அமெரிக்க திட்டம் கைவிடப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் யுத்த சூனிய பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் நோக்கில் அமெரிக்க இராணுவத்தின் ஆசியப் பசுபிக் பிராந்திய இராணுவ தலைமையகம் மற்றும் இந்தியா இணைந்து கூட்டாக மேற்கொண்ட முயற்சி புலிகளின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டுள்ளதாக கொழும்பு நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
மக்களை மீட்கவரும் படகுகள் மீது தாக்குதல் நடத்த போவதாக புலிகள் எச்சரித்திருந்தாகவும் இதனால் அந்த நடவடிக்கையை கைவிட நேர்ந்துள்ளதாகவும் அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க படையதிகாரிகளை ஏற்றிய டி 130 என்ற விமானம் இலங்கை வந்திருந்தது.
புலிகள் பொதுமக்கள் வாழும் பாதுகாப்பு வலய பகுதிகளில் இருந்து பீரங்கி மற்றும் எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் அமெரிக்க மற்றும் இந்திய அறிவித்துள்ளதாகவும் மேலும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
எனினும், மனிதநேயப் படைகள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்கவேண்டும் அல்லது மனிதநேயப் படைகள் மீது புலிகள் தாக்குதல் நடத்தக்கூடாது என்ற இணக்கப்பாடொன்றுக்குச் செல்ல வேண்டும் என சில படைதுறை ஆய்வாளர்கள் முன்கூட்டியே கருத்து தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply