ஜனாதிபதியை தலைவரென கூறுவதில் நான் பெருமை கொள்கின்றேன்:அமைச்சர் முரளிதரன்

கோழையான பிரபாகரனை தலைவர் என அழைப் பதைவிட உலக நாடுகளே வியக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தலைவரென கூறுவதில் பெருமையடைவதாக அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில்;

இன்றைய நாகரிக உலகில் அதற்கேற்ப நாமும் மாறவேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினை வேறு பயங்கரவாத பிரச்சினை வேறு என சகலரும் உணர்ந்து செயற்படுகின்ற இந்த நாகரிக சூழலில் ஜனாதிபதியின் கரத்தைப் பலப்படுத்துவதே முக்கியமானது.

கடந்த கால வரலாறு தேவையற்றது. நாகரிக உலகுக்கு எம்மை மாற்றிக்கொண்டு தேசிய அரசியலில் பிரவேசித்து எம்மைப் பலப்படுத்திக்கொள்வது அவசியம்.

எமது மக்களின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது மக்களுக்கான அமைதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பது இவை இரண்டும் எம்முன் உள்ள முக்கிய தேவைகளாகின்றன. இவற்றை நாம் பெற்றுக்கொள்ள ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது.

கிழக்கில் இன்று பயமின்றி அச்சமின்றி பாதுகாப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. வடக்கிலும் இந்நிலை விரைவில் உருவாவது உறுதி, ஒரே நாடு ஒரே தலைமை என்ற வழியில் நாட்டின் மேம்பாட்டுக்கு சகலரும் அர்ப்பணிப்புடன் உழைப்பது அவசியம்.

இன்று பல தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளன. சிறு சிறு கட்சிகளை வைத்துக்கொண்டு எமது மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது விளையாட்டு அமைப்புக்கள் போன்று பல கட்சிகள் தம்மை மட்டுமே பார்த்துக்கொள்கின்றன.

“தம்பி உடையான் படைக் அஞ்சான்” என்பது போல் ஜனாதிபதிக்கு பசில் ராஜபக்ஷவும், கோத்தாபய ராஜ பக்ஷவும் உறுதுணையாகவும் செயல் வீரர்களாகவும் உள்ளனர். எமது இன்றைய மாற்றங்களுக்கும் இவர்களே திரைமறைவில் உதவியவர்கள்.

இன்றைய அரசாங்கத்தின் அமைச்சர்களும் எந்த இனத்துவேஷமுமற்றவர்கள். எமது மக்களையும் இந்த நாட்டு மக்களைப் பார்த்துசெயற்படுகின்றவர்கள் அவர்க ளுடன் நான் நெருங்கிப் பழகியுள்ளேன். அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினையை நன்குணர்ந்தவர்கள்.

இது வரலாற்றில் முக்கியமான தினம் இந்நாட்டின் பலமான சக்தியாக நாம் செயற்பட சிறந்த சந்தர்ப்பம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply