தமிழ்த்தேசிய கூட்டமைபை நான் தமிழ்த் தேசிய கூத்தாடிகளாகத்தான் பார்த்திருக்கின்றேன்: விநாயகமூர்த்தி முரளிதரன்

ஐக்கியதேசியக் கட்சி ஆட்சியிலிருந்த காலத்தில்தான் தமிழர்கள் அதிகளவில் கொன்றழிக்கப்பட்டனர். அவர்கள் 1983ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தை தொடக்கி வைத்தவர்கள். யுத்தத்தை தொடக்கிவைத்ததே ஐக்கிய தேசியக் கட்சியினர் தான். ஜே.ஆர்.ஜயவர்தன அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தமிழர்கள் அதிகளவில் கொன்றழிக்கப்பட்டனர். கொழும்பில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் தான் நாங்கள் தமிழரை காப்பாற்றுவதற்காக யுத்தத்திற்கு சென்றோம். தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்த அவர்கள் அதிகளவான படுகொலைகளை செய்தனர்.

அதேபோன்று மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களிலும் ஐக்கிய தேசிய கட்சி காலத்திலேயே அதிக படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன.

1988ஆம் ஆண்டு ஓட்டமாவடிப் பாலத்தில் தமிழர்களின் கழுத்துகளை வெட்டி கொலை செய்தார்கள். பல்கலைக்கழகத்தினுள் தஞ்சம் கோரியிருந்த 360பொதுமக்களை கொலை செய்தார்கள்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு தமிழர் மேல் உண்மையான பற்று இருந்தால் இவர்கள் உங்களை மகிந்தவுக்கு வாக்களிக்கச் சொல்ல வேண்டுமென நான் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன்.அப்படிச்செய்தால்தான் அவர்களை ஒரு தூய தமிழ்க் கட்சியாக நான் பார்ப்பேன்.

நான் இதுவரை அவர்களை தமிழ்த்தேசியக் கட்சியாக பார்த்ததில்லை. தமிழ்த் தேசிய கூத்தாடிகளாகத்தான் பார்த்திருக்கின்றேன்.

மக்கள் இவ்விடயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply