மைத்திரி ஆட்சிக்கு வந்தால் அரச ஊழியர்கள் 5 இலட்சமாக குறையும்

ஐக்கிய தேசியக் கட்சியின் சிந்தனையை பிரதிபலிக்கும் விதமாகவே எதிரணியினரின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளதே தவிர அதில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சிந்தனை இடம்பெறுவதாக தெரியவில்லையென பொது நிர்வாக சேவைகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன நேற்றுத் தெரிவித்தார். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது 14 இலட்சமாகவுள்ள அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை 05 இலட்சமாக குறைவடைவது உறுதியெனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் எதிரணி வெற்றியடையாது என்பதனை உறுதியாக அறிந்து கொண்டவர் களாகவே இவர்கள் நடைமுறைக்கு சாத்தியமாகாத அரசாங்க ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு மற்றும் இலவச மோட்டார் சைக்கிள்களை பெற்றுத்தரப் போவதாக கற்பனை கதைகளை கூறி வருகின்றனர்.

அரசாங்க நிறுவனங்களை சிங்கப்பூரின் தமசெக் நிறுவனத்திடம் ஒப்படைப்பதன் மூலம் அனைத்தையும் தனியார் மயப்படுத்துவதே எதிரணியின் பிரதான இலக்காக உள்ளதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்றுக்காலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்று கையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்துக்களை முன்வைத்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

அரசாங்க ஊழியர்களுக்கு எந்தவொரு நாட்டுத் தலைவரும் செய்திராத அளப்பரிய சேவையையும் சலுகைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமே பெற்றுத்தந்துள்ளது. இவர்கள் எதுவுமே செய்திராமல் அரசாங்க ஊழியர்களுக்கு சேவை செய்வதாக கற்பனைக் கதைகளைக் கூறிக்கொண்டு அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர் என்பதனை அரசாங்க உத்தியோகத்தர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் அரசாங்க உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையினை மூன்று இலட்சமாக குறைக்க திட்டமிட்டவர்கள் இன்று சிங்கப்பூர் ‘தமசெக்’ நிறுவனம் பற்றி பேசுவது வேடிக்கையாகவுள்ளது.

எமது அரசாங்கத்தில் அனைத்து அரசாங்க வேலை வாய்ப்புகளும் எழுத்து மூல பரீட்சைகள் நடத்தப்பட்டு நேர் காணலின் பின்னர் திறமையடிப்படை யிலேயே வழங்கப்பட்டன. ஐ.தே.க. ஆட்சிக் காலத்திலேயே தொழில் வழங் குவதில் பல மோசடிகள் இடம்பெற்றன.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், அரசாங்க ஊழியரொருவரின் அடிப்படை சம்பளத்தை 15 ஆயிரம் ரூபாவாகவும், வாழ்க்கைச் செலவினை ஆகக்கூடியது 10 ஆயிரம் ரூபா ஆகும் வகையிலும் அதிகரித்துள்ளன. மேலும் இலகு கடன் அடிப்படையில் மோட்டார் சைக்கிள் மொத்த சம்பளத்தில் 40 சதவீத கடன் உள்ளிட்ட பல சலுகைகளை பெற்றுக்கொடுத்திருப்ப தாகவும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply