பிர­சா­ரத்­திற்­காக சல்­மான்­கானை அர­சாங்கம் அழைத்­துள்­ளது : ஹரீன் பெர்னாண்டோ

ஜனா­தி­பதி தேர்தல் பிர­சா­ரத்­திற்­காக இந்­திய திரைப்­பட நடிகர் சல்­மான்­கானை அர­சாங்கம் அழைத்­துள்­ள­தாக தெரி­வித்துள்ள ஊவா மாகாண சபையின் எதிர்க்­கட்சித்­ த­லைவர் ஹரீன் பெர்­னாண்டோ கோடிக்­க­ணக்­கான நிதியை பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஒதுக்­கி­யுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார். எதிர்க்­கட்­சித்­த­லைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­லாளர் மாநாட் டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,பாரி­ய­ளவு வேலை­வாய்ப்பு வாக்­கு­று­திகள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இலங்­கையில் அரச சேவை­யா­ளர்கள் 13 இலட்சம் பேர் காணப்­ப­டு­வ­துடன் 80இலட்­சத்­திற்கும் அதி­க­மானோர் தனியார் துறையில் காணப்­ப­டு­கின்­றனர்.

எவ்­வி­த­மான தொழில்­வாய்­ப்புக்­களை யும் ஏற்­ப­டுத்­தாது குறிப்­பட்ட அரச சேவை வாய்ப்­புக்­களை பிர­சா­ரப்­ப­டுத்தி வரு­கின்­றனர். தற்­போது வேலை­வாய்ப்பு வழங்கு­ வ­தாக கட்­டா­யப்­ப­டுத்தி இளைஞர் யுவ­தி­களை பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்கு அழைத்து வரு­கின்­றனர். குறிப்­பாக அர­சாங்­ கத்தால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள நீலப்­ப­டை யில் இவ்­வா­றா­ன­வர்­களே காணப்­ப­டு­கின்­றார்கள். அவர்­களை பிர­சா­ரத்­திற்­காக பயன்­ப­டுத்து­கின்­றார்கள்.

வரு­டத்­திற்கு 20ஆயிரம் பேர் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்குச் செல்­கின்­றனர். இருப்­பினும் இளைஞர் யுவ­தி­க­ளுக்கு கல்­விக்­கேற்ற அரச வேலை­வாய்ப்­புக்கள் கிடைப்­ப­தில் லை. அதே­நேரம் கா.பொ.த.சாதா­ரண, உயர்­த­ரத்­துடன் கல்­வியை இடை­நி­றுத்­திக்­கொள்­ப­வர்­க­ளுக்கு தொழில் வாய்ப்­புக்கள் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. உத­ார­ண­மாக அம்பாந்­தோட்டை துறை­முகம் அமைக்­கப்­பட்­ டுள்­ள­போதும் தனியார் மனி­த­வள நிறு­வ­னத்­தி­டமே பொறுப்பு ஒப்­ப­டைக்­கப்­பட்­ டுள்­ளது.

அவ்­வா­றி­ருக்க தற்­போது தேர்தல் பிர­சா­ரத்­திற்­காக இந்­திய பொலிவூட் நடிகர் சல்­மான்­கானை அர­சாங்கம் அழைத்­துள்­ளது. நாட்­டி­லுள்ள நடிகர், நடி­கைகள் அர­சாங்­கத்தை எதிர்ப்­பதால் இவ்­வா­றான முயற்­சியை மேற்­கொண்­டுள்­ளார்கள். அதே­நேரம் பல்­லா­யி­ரக்­கணக்கான வாக்­கு­று­திகள் இம்­மு­றையும் மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு வரு­கின்­ றன. கோடிக்­க­ணக்­கான நிதி பிர­சா­ரத்­திற்­காக ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றா­யினும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் இளைஞர் அணியும் ஏனைய இளைஞர் சமூகமும் ஒன்றிணைந்து நியாயமான தேர்தலுக்காக செயற்படவுள்ளோம். இளையோர் சமுதாயத்தாலேயே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மேலும் எதிர் கால இளையோர் சமூகத்தின் பாதுகாப்பிற்காகவும் வளமான எதிர்காலத்திற்காகவும் விசேட நிகழ்ச்சித் திட்டமொன்று அமைக்கப்படவுள்ளது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply