2015;ஜனாதிபதித் தேர்தல் ;தபால் மூல வாக்களிப்பு இன்று

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு உத்தியோகபூர்வ அஞ்சல்மூல வாக்களிப்பு நாடு முழுவதும் இன்றும் (23) நாளையும் (24) நடத்தப்படவுள்ளது. அஞ்சல்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் அரசாங்க அலுவலகத்தில் காலை 7 மணிமுதல் மாலை 4 மணிக்குள்ளாக தமது அஞ்சல் வாக்கினை செலுத்த முடியும். இம்முறை 5 இலட்சத்து 45 ஆயிரம் வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தமது வாக்காளர் தொகுதியி லிருந்து இடமாற்றம் பெற்று வேறொரு பிரதேசத்தில் பணிபுரியும் அரசாங்க உத்தியோகத்தர்கள், முப்படையினர், பொலிஸார், தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்காக மேற்படி இரு தினங்களிலும் அஞ்சல் மூல வாக்களிப்பு நடத்தப்படுகின்றது.

இவ்வருடம் ஜனாதிபதி தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்காக பலர் விண்ணப்பித்திருந்தபோது பல்வேறு காரணங்களுக்காக சில விண்ணப்பங்கள் தேர்தல்கள் திணைக்களத்தினால் நிராகரிக்கப்பட்டனர்.

அஞ்சல் மூல வாக்களிப்பு நடத்தப்படும் அரச அலுவலகத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் வாக்காளர்கள் அடையாளமிடும் சின்னம் பிறர் அறியாத வகையில் இரகசியமாக பேணப்படு மெனவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை அஞ்சல் மூல வாக்காளர்கள் வாக்களிக்கையில் அதற்கு தடையை அல்லது அச்சுறுத்தலை செய்ய முயற்சித்தால் அவ்விடத்தின் வாக்கெடுப்பு வரிதாக்கப் படுமெனவும் அவர் கண்டிப்புடன் அறிவித்துள்ளார்.

மேலும் அஞ்சல் மூல வாக்களிப்பு நடத்தப்படும் அலுவலகங்களுக்குள்ளோ அல்லது வெளியிலோ தேர்தல் சட்ட விதிமுறையை மீறிச் செயற்படுவோர்க்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.மொஹமட் கூறினார்.

அந்த வகையில், வாக்களிப்பு நடத்தப் படும் அரச அலுவலகத்தில் வேட் பாளரொருவரின் வேட்பாண்மையை ஊக்குவிப்பதற்கான அச்சிடப்பட்ட உருவப்படம், பத்திரம், அடையாளம், இலக்கம், சின்னம் ஆகியவற்றை காட்சிப்படுத்தப்பட்ட துண்டுப் பிரசுரங் களை விநியோகித்தல், வாக்கை இரத்து கேட்டல் அல்லது வேட்பாளரொருவ ருக்கு வாக்களிக்க வேண்டாமென தூண்டுதல், வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தடையேற்படுத்தல், வாக்குச்சீட்டை வெளியே கொண்டு வர முனைதல், அடையாளமிடப்பட்ட வாக்குச்சீட்டை பிறருக்கு காட்டுதல் அல்லது அதனைக் காட்டுமாறு அஞ்சல் வாக்காளரை வற்புறுத்துதல் ஆகியன சட்டப்படி குற்றமாகுமெனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

தவிர்க்க முடியாத காரணத்தினால் இன்றும் நாளையும் வாக்களிக்க தவறியவர்கள் 30ஆம் திகதி தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் வாக்களிக்க முடியும்.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிர்வரும் 26ஆம் திகதியன்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு 30 ஆம் திகதியன்றும் அஞ்சல்மூல வாக்களிப்பு நடத்தப்படும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply