பகிரங்க விவாதத்திற்கு வேட்பாளர்களான மஹிந்தவும் மைத்திரியும் வரவேண்டும் : சட்டத்தரணிகள் சங்கம்
ஜனாதிபதி வேட்பாளர்களான மஹிந்த ராஜபக் ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரை ஜனவரி 2 ஆம் திகதிக்கும் 5ஆம் திகதிக்கும் இடைப்பட்ட தினமொன்றில் பகிரங்க விவாதத்தில் பங்கேற்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. சட்டத்தின் ஆட்சிஇ சுதந்திரமான நீதித்துறைஇ நல்லாட்சிஇ சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தல்இ ஊழல் ஒழிப்பு ஆகிய ஐந்து பிரதான விடயங்களின் கீழ் 33 வினாக்கொத்தொன்றும் நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அழைப்பிதல்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அச்சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் பிரதித் தலைவர் பிரசன்ன ஜயரத்னஇ செயலாளர் அஜித்பத்திரண ஆகியோர் உட்பட முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.
இங்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நீதியானதும் சுதந்திரமானதும் ஜனநாயகமானதுமான தேர்தலொன்று நடைபெறவேண்டும் என்பதில் எமது சங்கம் ஏகமனதாக தீர்மானித்து அதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
கடந்த சனிக்கிழமை எமது சங்கத்தின் கூட்டம் இடம்பெற்ற போது ஜனாதிபதி வேட்பாளர்களுக்கிடையில் விவாதமொன்றை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக் ஷ மற்றும்இ மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு பகிரங்கமான விவாதமொன்றில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளோம்.
அத்துடன் அவர்கள் இவ்வழைப்பிதலை ஏற்றுக்கொண்டு அவ்விவாதத்தில் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எமக்குள்ளது. மேலும் சர்வதேச நாடுகளில் இவ்வாறான விவாதங்கள் இடம்பெறுகின்ற போதும் இலங்கை வரலாற்றில் இடம்பெறும் முதலாவது சந்தர்ப்பமாக அமையும்.
இந்த விவாதத்தினை நெறிப்படுத்துபவர்களாக கட்சிபேதமற்றஇ அரசியல் சார்பற்ற மூன்று புத்திஜீவிகள் இருப்பார்கள் என்பதுடன்இ குறித்த விவாதம் இலங்கை சட்டத்தரணிகள் கேட்போர் கூடத்தில் நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் ஆட்சிஇ சுதந்திரமான நீதித்துறைஇ நல்லாட்சிஇ சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தல்இ ஊழல் ஒழிப்பு ஆகிய ஐந்து பிரதான விடயங்களின் கீழ் 33 வினாக்கொத்தொன்று அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான பதில்களை வேட்பாளர்கள் இருவரும் எமது சங்கத்திற்கு வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம். அப்பதில்கள் அனைத்தும் மக்கள் மயப்படுத்தப்படவுள்ளன.
அத்துடன் ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஐம்பது அழைப்பிதழ்கள் வழங்கத் தீர்மானித்துள்ளதுடன் இலத்திரனியல் ஊடகங்கள் இந்த விவாதத்தை நேரடியாக ஒளிபரப்புச் செய்வதற்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதோடு ஏனைய ஊடகங்களும் பதிவு செய்துகொள்ளமுடியும்.
இவ்வாறான விவாதங்கள் எந்த வொரு அரசியல் நோக்கத்தினை கருத்திற்கொண் டும் நாம் மேற்கொள்ளவில்லை. மாறாக வேட்பாளர்கள் தொடர்பான தெளி
வான நிலைப்பாட்டை மக்கள் எடுப் பதற்கு உதவியாக இருக்கும் என்ற அடிப் படையிலேயே இச்செயற்பாட்டை முன் னெடுக்கின்றோம். அதேநேரம் நாட்டின் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்துவதாக இருக்கும் என்றார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply