மெக்சிகோவில் மனைவி, 6 குழந்தைகளை கொலை செய்து ராணுவ வீரர் தற்கொலை
மெக்சிகோ நகரின் புறநகர் பகுதியான எகோடபெக் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர், தனது 6 குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதனை தடுக்க முயன்ற தனது மனைவியை வயிற்றில் அடித்து கொலை செய்ததோடு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்த குழந்தைகளில் 2 பேர் பெண் குழந்தைகள்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்த சம்பவம் மெக்சிகோவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply