கண்ணுக்குத் தெரியாத அழகியைவிட கண்ணுக்குத் தெரிந்த பேய் நல்லது

நாட்டின் அடுத்த ஜனா­தி­ப­தி­யாக நானே வரவிருப்பதனால் நாட்டில் காணப்­படும் பொரு­ளா­தார ஸ்திரத்­தன்­மையின் அடிப்­ப­டை­யி­லேயே எனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை வெளியிட்­டுள்­ள­தாக ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார். கொழும்பு வர்த்­தக சங்­கத்தின் வர்த்­த­கர்­க­ளுக்கும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இடை­யி­லான சந்­திப்பு ஒன்று நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை மாலை கொழும்பு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச ஞாப­கார்த்த மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. இந் நிகழ்வில் கலந்து கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இதன் போது தொடர்ந்து உரை­யாற்­றிய ஜனா­தி­பதி,

நாட்டின் முப்­பது வருட கால­மாக நில­விய கொடிய யுத்­தத்தின் போது மக்­களை பாது­காத்­தி­டவும் மற்றும் நாட்டை அபி­வி­ருத்தி பாதைக்கு கொண்டு செல்­வது உள்­ளிட்ட பாரிய பொறுப்பு என்­னிடம் காணப்­பட்­டது. இவ்­வி­ரண்­டையும் மக்­களின் ஒத்­து­ழைப்­புடன் செய்­துள்ளேன் என நான் நினைக்­கின்றேன். அன்­றைய கால கட்­டங்­களில் கப்பம் கேட்கும் மற்றும் பாதாள உலக தலை­வர்­களின் அச்­சு­றுத்­தல்கள் வர்த்­த­கர்கள் உட்­பட அமைச்­சுக்­க­ளுக்கும் பாரிய பிரச்­சி­னை­யாக காணப்­பட்­டது. இன்று அவர்­களின் நட­வ­டிக்­கைகள் முற்று முழு­வ­து­மாக ஒடுக்­கப்­பட்­டுள்­ளது.

இன்று எமது நாடு பாரிய அபி­வி­ருத்­தியை கொண்டு பய­ணிக்­கின்­றது. இதனை எந்த சக்­தி­யாலும் இடை நிறுத்த அனு­ம­தி­ய­ளிக்க போவது இல்லை. பொது எதி­ர­ணியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்­களில் மக்­க­ளுக்கும் நாட்­டிற்கும் எவ்­வித பயன்­களும் இல்லை. இவை வெறு­மனே வாக்­கு­களை பெறு­வ­தற்கு தயா­ரிக்­கப்­பட்ட ஒன்று எதி­ர­ணியின் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிட்­ட­வற்றை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டு­மாயின் நாடா­னது பாரிய கடன் சுமையை எதிர்­நோக்க நேரிடும். எதி­ர­ணியின் நூறு நாள் வேளை திட்­ட­மா­னது அர்த்தம் அற்­றது. இவர்­களின் செயற்­றிட்­டங்கள் நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மற்­றது.

யுத்­தத்தை நான் முன்­னெ­டுத்த போது எனக்கு சர்­வ­தேச உட்­பட பல்­வேறு வகை­யிலும் எனக்கு அச்­சு­றுத்­தல்கள் ஏற்­பட்­டது. இது தொடர்பில் நான் எவ்­வித தீர்­மா­னங்­க­ளையும் எடுப்­ப­தற்கு தயங்­காமல் மக்­களை பாது­காக்க எனது நட­வ­டிக்­கை­களை தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்தேன்.

தேர்தல் அண்­மிக்கும் இத்­த­ரு­ணத்தில் தனிப்­பட்ட சுய­ந­ல­னுக்­காக என்­னுடன் இருந்து இறுதி திகதி வரை அப்பம் சாப்பிட்ட பொது வேட்பாளருடன் சில அமைச்சர்கள் இணைந்துள்ளனர். கண்ணுக்கு தெரியாத அழகியை விட கண்ணுக்கு தெரிந்த பேய் எமக்கு நல்லது என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என இதன் போது மஹிந்த ராஜபக் ஷ மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply