ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நான்கு வருடங்களாக குறைப்பேன் : மைத்திரி

நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து ஜனாதிபதியின் பதவிக்காலத்தை  நான்கு வருடங்களாக குறைப்பேன் என்று  எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு வர்த்தகக் கண்காட்சி மண்டபத்தில் நேற்று  இடம்பெற்ற தேசிய ஐக்கிய அமைப்பின் முஸ்லிம் சமூக ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து பேசுகையில்,

உலக நாடுகளில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 அல்லது ஐந்து வருடங்களேயாகும். எமது நாட்டில் மட்டுமே அது ஆறு வருடங்களாக உள்ளது. நான் பதவிக்கு வந்ததும் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 4 வருடங்களாகக் குறைப்பேன். அத்துடன் ஒரு தடவைக்கு மேல் பதவி வகிக்கவும்மாட்டேன். ஜனாதிபதி பதவியை அலங்காரமாகப் பயன்படுத்தவும் மாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply