காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்
காஷ்மீரின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய எல்லை பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், காஷ்மீர் மாநிலம் ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஆர்னியா சப்–செக்டரில் சர்வதேச எல்லையில் அமைந்துள்ள விக்ரமன் நிலை மீது பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவு 1.30 மணிக்கு நடந்த இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.
இதேபோல், கதுவா மாவட்டம் ஹிரநகர் செக்டரில் உள்ள ஜபோவல் நிலை மீதும் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர். இதிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடந்த 4 நாட்களில் நடந்த 4–வது தாக்குதல் இதுவாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply