அமெரிக்காவில் 2 வயது மகன் துப்பாக்கியால் சுட்டதில் தாய் பலி

அமெரிக்காவின் இதாகோ மாகாணத்தில் உள்ள பிளாக்பூட் பகுதியை சேர்ந்தவர் வெரோனிகா ஜெரூட் லெட்ஜ் (29). இவர் குழந்தைகளுடன் ஹேடென் நகரில் உள்ள வால்–மார்ட் வணிக வளாகத்துக்கு சென்றிருந்தார்.அங்கு எலக்ட்ரானிக் பிரிவுக்கு சென்று பொருட்களை தேர்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் தனது கைப்பையில் குண்டுகள் நிரம்பிய துப்பாக்கி வைத்திருந்தார்.அப்போது வெரோனி காவின் 2 வயது மகன் அவரது கைப்பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிக்கொண்டிருந்தான். அதை அவர் கவனிக்கவில்லை.இந்நிலையில் அவன் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் தனது தாயார் வெரோனிகாவை நோக்கி சரமாரியாக சுட்டான்.இதனால் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பலியானார். இதற்கிடையே அச்சம்பவம் தற்செயலாக நடந்த விபத்து என வால்மார்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply