பிறக்கப்போகும் புத்தாண்டிணை விடியலை நோக்கியதாக வரவேற்போம். ப.உதயராசா

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் மரபு. அதற்கு அமைவாக விடியப்போகின்ற இந்த வருடத்தை அமைதியுடனும் அபிவிருத்தியுடனும் புதுப்பொலிவடைய செய்ய உளத்தெளிவுடனும் நம்பிக்கையுடனும் பிறப்போகும் புத்தாண்டினை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் என சிறிரெலோகட்சியின் செயலாளர் ப.உதயராசா தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவருடைய வாழ்த்துச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

கொடிய குண்டுச்சத்தங்களுடனும் அவலக்குரல்களுடனும் புத்தாண்டினை வரவேற்ற காலங்கள் உருண்டோடிவிட்டன. அவ்வாறான துன்பியல் காலம் எமக்கானது அல்ல என்றாகி விட்டது. தற்போது ஆலயங்களின் மணி ஓசையுடனும் மதப்பெரியார்களின் வேத வாக்குகள் மற்றும் மந்திரங்களுடனும் பக்தியுடனும் புத்தாண்டை வரவேற்க சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இச்சந்தர்ப்பத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவரிடமும் உள்ளது.ஆகவே காழ்ப்புணர்வுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையுடனும் சகோதரத்துடனும் சந்தோசத்துடனும் வாழ்வதற்காக புதுவருடத்தினை அமைத்துக்கொள்ள இறைவனை பிரார்த்திப்போம்.

அது மாத்திரமன்றி புத்தாடைகள் அணிந்து மகிழ்ச்சியுறும் அதேவேளை உணவற்று உடையற்று இருக்கும் நம் அயலவர்களை இரக்ககுணத்துடன் உதவி செய்து மதவிழுமியங்களையும் அனுட்டானங்களையும் மேற்கொள்வதற்கு உறுதி பூணுவோம் எனவும் அந்த வாழ்த்துச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply