காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: 13 இடங்களில் விடிய விடிய தாக்குதல்
ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லையில் இந்திய நிலைகளை குறிவைத்து நேற்றிரவு (புதன்கிழமை) முதல் இன்று காலை 6 மணி வரை தாக்குதல் நடத்தியுள்ளது. சம்பா மாவட்டத்தில், 13 இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, புதன்கிழமை இரவு சர்வதேச எல்லையில் இந்திய வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது, பாகிஸ்தான் தரப்பிலிருந்து தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், ஸ்ரீராம் கவுரியா என்ற வீரர் உயிரிழந்தார். மற்றொரு வீரர் காயமடைந்தார்.இந்திய வீரர்கள் கடும் பதிலடி கொடுத்தனர். இதில், 4 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர். தங்கள் வீரர்களின் மரணத்தால் பாதிப்படைந்த பாகிஸ்தான் ராணுவம் வெள்ளைக் கொடி காட்டி, தாக்குதலை நிறுத்தும்படி கோரியது. இறந்த வீரர்களின் உடலை எடுத்துச் செல்வதற்காக பாகிஸ்தான் ராணுவம் அவ்வாறு கோரியது. அவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்திய தரப்பு தாக்குதலை நிறுத்தியது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply