பழிவாங்கும் அரசியல் எம்மிடமில்லை : முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
பழிவாங்கும் அரசியல் எம்மிடமில்லை. ராஜபக் ஷ குடும்பத்தினரே வைராக்கிய அரசியலை முன்னெடுப்பதாக சாடிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க, நாட்டு மக்களை பழிவாங்கும் ராஜபக் ஷவிடமிருந்து நாட்டை பாதுகாக்கவே தாம் முனைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மாத்தளை மாவட்ட எம்.பி.யும் பிரதி அமைச்சருமான நந்திமித்திர ஏக்க நாயக்க எதிரணியுடன் இணைந்து கொள்ளும் ஊடகவியலாளர் மாநாடு அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.
பழிவாங்கல் அரசியல் தொடர்பில் மஹிந்த ராஜபக் ஷ பிரசார கூட்டங்களில் எம்மீது பழி போடுகிறார். பழிவாங்கல் அரசியல் தொடர்பில் நான் அவ்வரசிற்கு கூற வேண்டிய தேவைப்பாடும் கிடையாது.
எம்மிடம் ஒரு போதும் அரசியல் பழிவாங்கல் இருந்ததில்லை. நாம் அவ்வாறு செயற்பட போவதுமில்லை. எனது ஆட்சி காலத்தில் கட்சி சார்ந்த அரசு ஊழியர்களை இடம் மாற்றம் செய்ய நான் ஒரு போதும் அனுமதி வழங்கவில்லை.
இவ்வாறு அரசியலை நாம் செய்ய கற்றுக்கொள்ளவில்லை. எனினும் ஜனாதிபதி கதிரைக்கு மஹிந்த ராஜபக் ஷவை அமர வைத்தது நானே. எனினும் சுமார் 9 வருடம் எனக்கு செய்யாத அநியாயம் இல்லை. 7 வருடம் என்னை நாட்டிற்கு வர இடமளிக்கவில்லை.
இவ்வாறு என்னை பழிவாங்கியது ராஜபக் ஷவினரே. எனவே பழிவாங்கல் அரசியல் ராஜபக் ஷ குடும்பத்தினரிடமே உள்ளது. இந்நிலையில் நாட்டு மக்களை பழிவாங் கும் ராஜபக் ஷவை தோற்கடிப்பதே எமது நோக்கம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply