இலங்கையை தனிமைப்படுத்தும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் : மைத்திரி

சர்வ­தே­சத்தின் பெரும்­பா­லான நாடு­களின் நம்­பிக்­கையை தற்­போது இலங்கை இழந்­துள்­ளமை கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். மனித உரிமை மீறல் தொடர்­பாக சர்­வ­தேச சமூகத் தின் பிரே­ர­ணை­க­ளுக்கு நாங்கள் இலக்­கா­கி­யுள்ளோம். இந்­நி­லையில் இலங்­கையை உல­கிலி­ருந்து தனி­மைப்­ப­டுத்தும் செயற்­பா­டு­க­ளுக்கு எனது அர­சாங்கம் முற்­றுப்­புள்ளி வைக் கும் என்­ப­தனை உறு­திப்­ப­டுத்­து­கின்றேன் என்று எதி­ர­ணியின்பொதுவேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு வாக்­க­ளிக்­கு­மாறு மக்­க­ளுக்கு அழுத்தம் பிர­யோ­கிப்­ப­தற்­காக இரா­ணுவ வீரர்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர். இவ்­வா­றான நிலையில் நீதி­யா­னதும் நியா­ய­மா­ன­து­மான தேர்தல் குறித்து நான் பயப்­ப­டு­கின்றேன் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது எதிர்­கால வேலைத்­திட்டம் தொடர்பில் கொழும்பில் உள்ள வெளி­நாட்டு இரா­ஜ­தந்­தி­ரி­களை தெளி­வு­ப­டுத்தும் நோக்கில் நேற்று கல­தாரி ஹோட்­டலில் நடை­பெற்ற நிகழ்­வி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க இ ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்க மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான அர்­ஜுன ரண­துங்க, ரவி கரு­ணா­நா­யக்க, ராஜித்த சேனா­ரட்ன, கரு­ஜ­ய­சூ­ரிய, எரான் விக்­ர­ம­ரட்ன, ரிஷாத் பதி­யுதீன், ரவுப் ஹக்கீம், ஹர்ஷ டி.சில்வா, வெளி­நாட்டு இரா­ஜ­தந்­திர அதி­கா­ரிகள், ரோசி சேனா­நா­யக்க உள்­ளிட்­டோரும் கொழும்பில் வெளி­நாட்டு இரா­ஜ­தந்­திர அதி­கா­ரிகள்இ சிவில் சமூக அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்­து­கொண்­டனர்.

மைத்­தி­ரி­பால சிறி­சேன அங்கு தொடர்ந்து குறிப்­பி­டு­கையில்,

தீர்க்­க­மான தேர்தல்

இதற்கு முன்னர் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தல்­களை விட இந்தத் தேர்தல் முக்­கி­ய­மாக அமைந்­துள்­ளது. அர­சாங்­கத்தில் இருந்த மிக முக்­கி­ய­மான கட்­சிகள் எம்­முடன் இணைந்­துள்­ளன. நாட்டில் காணப்­படும் ஜன­நா­ய­க­மற்ற தன்மை ஊழல் மற்றும் ஜனா­தி­பதி மஹிந்­தவின் சர்­வா­தி­கார ஆட்சி என்­ப­ன­வற்றை முடி­வுக்கு கொண்­டு­வ­ரவே இவ்­வாறு அர­சாங்­கத்தில் இருந்த கட்­சிகள் எம்­முடன் இணைந்­து­கொண்­டுள்­ளன.

நீதி­யான தேர்­த­லுக்கு அர்ப்­ப­ணிப்பு

பொது எதி­ர­ணியின் பொது வேட்­பாளர் என்ற வகையில் நீதி­யா­னதும் நியா­ய­மா­னதும் வன்­மு­றை­யற்­ற­து­மான தேர்தல் ஒன்றை நடத்­து­வ­தற்கு நான் அர்ப்­ப­ணித்­துள்ளேன். நீங்கள் வீதிகள் ஊடாக பய­ணிக்கும் போது எனது சுவ­ரொட்­டி­களை காண்­பது அரி­தா­கவே இருக்கும்.வு தேர்தல் சட்­டங்­களை மீறும் வகையில் சுவ­ரொட்­டி­களை ஒட்­ட­வேண்டாம் என்று நான் எனது ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு கூறி­யுள்ளேன். எனினும் ஆளும் கட்சி வேட்­பா­ளரின் சிரித்த முகத்­து­ட­னான சுவ­ரொட்­டி­களை நீங்கள் அவ­தா­னித்­தி­ருப்­பீர்கள்.

100 நாள் திட்டம்

டிசம்பர் மாதம் 19 ஆம் நாங்கள் எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை வெளி­யிட்டோம். இரா­ஜ­தந்­திர சமூ­கத்­துக்கு இதன் பிர­திகள் வழங்­கப்­பட்­டன. அந்­த­வ­கையில் 100 நாட்­களில் நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள ஜனா­தி­பதி முறையில் காணப்­ப­டு­கின்ற அதி­கா­ரங்­களை குறைப்­ப­தற்கு முதன்மை அடிப்­ப­டையில் நட­வ­டிக்கை எடுப்பேன். அதற்கு பதி­லாக பாரா­ளு­மன்­றத்­துக்கு அதி­கா­ரங்­களை வழங்­கு­கின்ற அர­சி­ய­ல­மைப்பு கட்­ட­மைப்பை உரு­வாக்­குவேன்.

தேர்தல் முறை மாற்­றப்­படும்

தற்­போ­தைய தேர்தல் முறை பாரிய துஷ்­பி­ர­யோ­கத்­தக்கு உட்­பட்­டது என்று உங்­க­ளுக்குத் தெரியும். எனவே தேர்தல் முறையை மாற்­றி­ய­மைத்து அனைத்து தொகு­தி­க­ளுக்கும் ஒரு உறு­ப­பினர் இடம்­பெறும் வகையில் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். வாக்­கா­ளர்­க­ளு­ககும் உறுப்­பி­னர்­க­ளுக்கும் இடையில் சிறந்த நெருங்­கிய தொடர்பு இருக்கும் வகையில் இந்த முறையை உரு­வாக்­குவோம்.

18 ஐ அகற்­றுவேன்

ஜன­நா­யக சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு தேவை­யான நிறு­வ­னங்­களை மீண்டும் உரு­வாக்­குவேன். அந்­த­வ­கையில் 18 ஆவது திருத்தச் சட்டம் ரத்துச் செய்­யப்­படும். நீதி­சேவை பொலிஸ் அரச சேவை தேர்­தல்கள் கண்­காய்வு சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆகிய துறை­களில் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை நிய­மிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

மத்­திய வங்கி மறு­சீ­ர­மைக்­கப்­படும்

நாட்டின் மத்­திய வங்கி மறு­சீ­ர­மைக்­கப்­படும். அதா­வது நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை சுயா­தீ­ன­மாக மேற்­பார்வை செய்யும் மத்­திய வங்­கியின் வகி­பா­கத்தை அங்­கீ­ரித்து இந்த மறு­சீ­மைப்பு முன்­னெ­டுக்­கப்­படும். அனைத்து செயற்­பா­டு­க­ளிலும் பொறுப்­புக்­கூ­றலும் வெளிப்­ப­டைத்­தன்­மையும் காணப்­படும். நாட்டில் இடம்­பெற்­றுள்ள ஊழல் மற்றும் மோச­டிகள் குறித்து ஆராய ஊழல்கள் குறித்து விசா­ரி­ககும் சுயா­தீன ஆணைக்­கு­ழுவை நிய­மிப்பேன்.

சுதந்­திர ஊடகம்

சுயா­தீன மற்றும் சுதந்­திர ஊட­க­வி­யலை உறு­தி­ப­டுத்தும் சூழலை உரு­வாக்­குவேன். அர­சா்­ங­கத்தின் பிர­சார கரு­வி­யாக அரச ஊட­கங்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதை நிறுத்­துவேன். மேலும் தகவல் அறியும் சட்­ட­மூ­லத்தை அறி­மு­கப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுப்பேன்.

வெளி­யு­றவு சேவை மாற­றி­ய­மைக்­கப்­படும்

வெளி­நாட்டு சேவையை சிறந்த சேவ­யைாக மாற்­றி­ய­மைப்பேன். வெளி­நாட்டு சேவைக்கு அர­சியல் நிய­ம­னங்­களை செய்­ய­மாட்டேன். தொழில்சார் தகை­மை­யுள்­ள­வர்­க­ளைக்­கொண்டு வெளி­நாட்டு சேவையை மறு­சீ­ர­மைப்பேன். தேர்தல் ஆணை­யா­ள­ருக்கு அதி­கா­ரங்­களை வழங்க நட­வ­டிக்கை எடுப்­ப­துடன் சுதந்­தி­ர­மா­னதும் நீதி­யா­ன­து­மான தேர்­தலை நடத்­து­வ­தற்­கான சூழலை உரு­வாக்­கிக்­கொ­டுப்பேன்.

கைது செய்ய முயற்சி

ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் தேர்தல் பிர­சா­ரத்­துக்­காக அரச வளங்கள் பாரி­ய­ளவில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. எனது ஆத­ர­வா­ளர்­களை கைது செய்­வ­தற்கும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. எனது கூட்­டங்­க­ளுக்கு தாக்­குதல் நடத்­தப்­ப­டு­கின்­றன. சில இடங்­களில் தீவைக்­கப்­ப­டு­கின்­றன. மக்­களை வாக்­க­ளிப்­ப­தி­லி­ருந்து தடுப்­பதே இவர்­களின் நோக்­க­மாகும்.

இரா­ணுவ வீரர்கள் பயன்­ப­டுத்­தப்­படல்

ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு வாக்­க­ளிக்­கு­மாறு மக்­களை அழுத்தம் பிர­யோ­கிப்­ப­தற்­காக இரா­ணுவ வீரர்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர். இவ்­வா­றான நிலையில் நீதி­யா­னதும் நியா­ய­மா­ன­து­மான தேர்­தலை நடத்­து­வது என்­பது குறித்து நான் பயப்­ப­டு­கின்றேன். நானும் எனது ஆது­ர­வா­ளர்­களும் இந்த ஊழல் மிக்க தலை­மைத்­து­வத்தை மாற்­று­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் இருக்­கின்றேன் என்­ப­தனை வலி­யு­றுத்­து­கின்றேன்.

இலக்­கா­கி­யுள்ளோம்

இலங்கை சர்­வ­தேச சமூ­கத்தில் செயற்­படு உறுப்­பி­ன­ராக ஒரு காலத்தில் இருந்­தது. எனினும் இன்று உலகின் பெரும்பாலான நாடுகளின் நம்பிக்கையை இலங்கை இழந்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும். மனித உரிமை மீறல் தொடர்பாக சர்வதேச சமூத்தின் பிரேரணைகளுக்கு நாங்கள் இலக்காகியுள்ளோம்.

இந்நிலையில் இலங்கையை உலகிலிருந்து தனிமைப்படுத்தும் செயற்பாடுகளுக்கு எனது அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்கும் என்பதனை உறுதிபடுத்துகின்றேன். இலங்கையில் ஜனநாயகம் நல்லாட்சி அடிப்படை உரிமை சட்டத்தின் ஆட்சிபடுத்தல் ஊழலுக்கு முடிவு ஆகியவற்றை நிலைநாட்டினால் இலங்கை மீண்டும் சர்வதேச சமூகத்தின் மதிக்கத்தக்க பொறுப்புள்ள நாடாக மாறும்.

நாங்கள் சமத்துவமான சமூகத்தை உருவாக்குவோம். அனைத்து பிரஜைகளும் சமத்துவமான சந்தர்ப்பங்களை பெறும் வகையிலும் சகவாழ்வுடன் வாழும் வகையிலுமான சமூகத்தை உருவாக்குவோம் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply