தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க முடிவு

யாழ். பருத்தித்துறை, பச்சிலைப்பள்ளி உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர், உபதவிசாளர் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வசமுள்ள பருத்தித்துறை நகர சபை மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை ஆகியனவற்றின் இரு உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் நடராஜா நிரஞ்சனி, பருத்தித்துறைப் பிரதேச சபை உறுப்பினர் திருமதி கிரிசாந்தி நிரஞ்சன் ஆகிய இருவருமே ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கப்போவதாக அறிவித்துள் ளவர்களாவர். இவர்கள் இருவரும் அலரி மாளிகைக்குச் சென்று தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களுக்கான பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதுபோலவே பருத்தித்துறைப் பிரதேசத்திலும் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே முடியும் என்பதனாலேயே தாம் இம்முடிவுக்கு வந்ததாகத் தெரிவித்தனர்.

நீண்டகால யுத்தத்திற்குப் பின்னர் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மிக முக்கியமாகும். அழிந்து போன பருத்தித்துறையை நவீன மயமான பருத்தித்துறையாக மாற்ற வேண்டும். இதுவே இன்றைய முக்கிய தேவையாக மக்கள் கருத்துகின்றனர். பருத்தித்துறைப் பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. பருத்தித்துறை நகர சபை கழிவுகளை அகற் றுவதற்குக் கூட இன்று திணறிக்கொண்டிருக் கின்றது. இவ்வாறு இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்களின் எதிர்பார்ப்புக் களை நிறைவேற்ற வேண்டியது மக்கள் பிரதிநிதிகளான எங்கள் பொறுப்பாகும்.

தாங்கள் இதுபற்றி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை உடன் நேரில் கலந்துரையாடிய போது பருத்தித்துறை நகர சபைக்கும், பருத்தித்துறை பிரதேச சபைக்கும் தலா 2 கோடி ரூபா வுக்கான அபிவிருத்தித்திட்டங்களை வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக வழங்க உறுதி மொழி வழங்கியுள்ளார் என்றும் நிரஞ்சன் தினகரனுக்குத் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை நகர சபைத் தவிசாளருடன் தொடர்பு கொண்ட போது இது பற்றி அவர் (நிரஞ்சனி) தனக்கும் தெரி வித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தமது ஆதரவை வழங்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பச்சிலைப்பள்ளி தவிசாளர் உப தவிசாளர், இரு உறுப்பினர்கள் (நால்வரும்) தெரிவித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் உப தவிசாளர், உறுப்பினர்கள் இத்தீர்மானத்தைத் தெரிவித்தனர்.

இப்பிரதேச சபைத் தவிசாளர் டொமினிக் அன்ரனி உப தவிசாளர் ரி. சசிதரன், உறுப்பினர்களான எஸ். பேரின்பதரன் கே. சிவராஜா ஆகியோரே மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளவர்களாவர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply