ஹக்கீம் – மைத்திரி ஒப்பந்தம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் : உதய கம்மன்பில
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் கைச்சாத்திட்டுள்ள இரகசிய ஒப்பந்தம் மக்களிடையே பெரும் குழப்பத்தை தோற்றுவித்திருப்பதனால் எதிர்வரும் 08ஆம் திகதிக்கு முன்னர் தங்களது ஒப்பந்தம் எதைப்பற்றியது என்றது குறித்து இவர்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென முன்னாள் மாகாண உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று தெரிவித்தார். வேட்பாளர்கள் கைச்சாத்திடும் ஒப் பந்தம் குறித்து அறிந்து கொள்ளும் உரிமை வாக்காளர்களுக்குண்டு. இவ்விருவரினதும் அமைதி வாக்காளர்களை இருட்டிற்குள் தள்ளியுள்ளதெனவும் அவர் கூறினார்.
வாக்காளர் பெட்டியை காட்டி பேரம் பேசிய ஸ்ரீல.மு.கா. தலைவர் ஹக்கீமின் கோரிக்கைகள் அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து எதிர ணியுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாக கூறினாரே தவிர வெற்றியளித்திருப்பது எதுவென்பதனை அவர் மக்களுக்கு முன் திட்டவட்டமாக கூறத் தயங்குகிறாரெனவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தான் சர்வசன வாக்கெடுப்பை நடத்தமாட்டேனெனக் கூறியுள்ளதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தொடர்ந்தும் பதவி வகிக்கப்போகிறாரா என்பது மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
அரசியலமைப்பு மாற்றியமைத்தாலே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லா தொழிக்கமுடியும். ஆனால் மைத்திரிபால தற்போது அரசியலமைப்பை மாற்ற சர் வசன வாக்கெடுப்பை நடத்த மாட் டேனெனக் கூறியுள்ளார். அப்படியானால் அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க மாட்டாரெனவும் அவர் விளக்கம் கோரினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply