துருக்கியில் 90 ஆண்டுக்கு பின் புதிய கிறிஸ்தவ தேவாலயம் கட்ட அனுமதி
ஐரோப்பா கண்டத்தில் உள்ள துருக்கி முஸ்லிம் நாடு. அங்கு கடந்த 1923–ம் ஆண்டுவரை ஒட்டோ மான் பேரரசு இருந்தது. அது முடிவுக்கு வந்த பிறகு அங்கு புதிதாக கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்ட அனுமதி வழங்கப்படவில்லை.இங்கு ஏற்கனவே கிரேக்க பழமைவாதிகள், அமெரிக்கர்களின் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள் உள்ளன. இந்த நிலையில் 90 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அங்கு புதிதாக கிறிஸ்தவ தேவாலயம் கட்ட துருக்கி அரசு அனுமதி அளித்துள்ளது.இந்த தேவாலயத்தை சிரியா இனத்தவர் இஸ்தான் புல் புறநகரான யெசில்காய் என்ற இடத்தில் மர்மரா கடற்கரை பகுதியில் கட்ட உள்ளனர். துருக்கியின் தென் கிழக்கு பகுதியில் இவர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் வரை வசிக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply