அரசியல் அதிகாரங்களை பெறுவதற்கு வட-கிழக்கு மக்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் : பஷில் ராஜ­பக்ஷ 

நாட்டின் ஏனைய பகுதி மக்­க­ளுடன் இணைந்து தீர்­மானம் எடுப்­ப­தற்கும் அர­சியல் அதி­கா­ரங்­களை பெறு­வ­தற்கும் இம்­முறை கிடைக்­கப்­பெற்­றுள்ள அரு­மை­யான சந்­தர்ப்­பத்தை வடக்கு கிழக்கு மக்கள் ஜனா­தி­ப­தியை ஆத­ரிப்­பதன் மூலம் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­வேண்டும் என்று சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்­பா­ளரும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான பஷில் ராஜ­பக்ஷ தெரி­வித்தார். மேலும் மலை­யக தோட்டத் தொழி­லாளர் மக்­களின் வீட்­டுப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணப்­படும். அவர்­களை பொரு­ளா­தார ரீதியில் கட்­டி­யெ­ழுப்பும் திட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­படும். அத்­துடன் நாட்டில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்ட இன­வாத தலை­வர்கள் தற்­போது எங்கு உள்­ளனர் என்­பது தற்­போது முஸ்லிம் மக்­க­ளுக்கு நன்­றாக தெரிந்­தி­ருக்கும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

எதிர்­வரும் எடடாம் திகதி நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் குறிப்­பி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்,

எதிர்­வரும் எட்டாம் திகதி நடை­பெ­ற­வுள்ள தேர்­த­லா­னது மிகவும் தீர்க்­க­மா­ன­தாகும். குறிப்­பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நாட்டின் ஏனைய பகுதி மக்­க­ளுடன் இணைந்து நல்­லி­ணக்­கத்­துடன் செயற்­ப­டு­வ­தற்கு கிடைத்­துள்ள அரு­மை­யான சந்­தர்ப்­பத்தை சிறந்த முறையில் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­வேண்டும்.

குறிப்­பாக நாட்டின் ஏனைய பகுதி மக்­க­ளுடன் இணைந்து தீர்­மானம் எடுப்­ப­தற்கும் அர­சியல் அதி­கா­ரங்­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கும் உள்ள சந்­தர்ப்­பத்தை வடக்கு கிழக்கு மக்கள் இந்தத் தேர்­தலில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை ஆத­ரிப்­பதன் மூலம் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­வேண்டும்.

நாட்டில் தற்­போது சமா­தானம் நிலை­நாட்­டப்­பட்­டுள்­ள­துடன் அபி­வி­ருத்­தியும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. எனவே அவற்றை மீண்டும் நாம் இழந்­து­வி­டக்­கூ­டாது. அவற்றை தொடர்ந்து பேணு­வ­தற்கு தேவை­யான சூழலை நாம் உரு­வாக்­கிக்­கொள்­ள­வேண்டும். அத்­துடன் வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியில் வாழும் தமிழ் பேசும் மக்­களும் தேர்­தலில் ஜனா­தி­ப­தியை ஆத­ரிப்­பார்கள் என்ற நம்­பிக்கை உள்­ளது.

எனவே தேர்­தலில் வடக்கு கிழக்கு மக்கள் சிந்­தித்து தீர்­மானம் எடுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதே­போன்று மலை­யக மக்­களும் தற்­போ­தைய இந்த அபி­வி­ருத்­தியை தமது பகு­தி­களில் மேலும் விரி­வான முறையில் பெற்­றுக்­கொள்ளும் நோக்கில் சிந்­தித்து வாக்­க­ளிக்­க­வேண்டும். அந்த மக்­களின் காணி மற்றும் வீட்டுப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்­காக நாங்கள் திட்­டங்­களை முன்­வைத்­துள்ளோம். குறிப்­பாக மலை­யக மக்­களின் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­பது மிகவும் முக்­கி­ய­மாகும். அதற்­கா­கவும் திட்­டங்­களை நாங்கள் முன்­னெ­டுப்போம்.

இது இவ்­வாறு இருக்க இலங்­கையில் வாழும் முஸ்லிம் மக்கள் இந்தத் தேர்­தலில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை ஆத­ரிப்­பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாதமாக குரல் கொடுத்த தலைவர்கள் தற்போது எந்தப் பக்கத்தில் உள்ளனர் என்பது அந்த மக்களுக்குத் தெரியும். எனவே முஸ்லிம் மக்கள் எம்முடனேயே உள்ளனர் என்று எங்களுக்கு தெரியும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply