தமிழர் பகுதியில் ராணுவத்தை வாபஸ் பெற முடியாது: சிறீசேனா அறிவிப்பால் சர்ச்சை
வருகிற 8–ந்தேதி நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபால சிறீசேனா போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் அவருக்கு சிங்களர்களில் ஒரு பகுதியினரை தவிர மைனாரிட்டிகளாக உள்ள 2 முஸ்லிம் கட்சிகளும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் நேற்று இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தின் போது மைத்ரிபால சிறீசேனா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானால் நாட்டை துண்டாகவோ அல்லது இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் உருவாகவோ அனுமதிக்க மாட்டேன். இலங்கையின் வடக்கு மாகாணத்தில் (தமிழர் பகுதியில்) ராணுவம் வாபஸ் பெறப்பட மாட்டாது. நாட்டின் பாதுகாப்புக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை இவர் கூறியுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply