எதிரணியை உருவாக்கியிருப்பதே எமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி : மாதுலுவாவே சோபித தேரர்
ஒரு குடும்ப அரசியலுக்கு எதிராக சகல இனத் தலைவர்களையும் ஒன்றிணைத்து பொது எதிரணியினை உருவாக்கியிருப்பதே எமக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இதுவே நாட்டின் ஜனநாயகத்தை வென்றெடுக்க முதல் படியென தெரிவித்த கோட்டை நாக விகாரையின் விகாராதிபதியும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளருமான மாதுலுவாவே சோபித தேரர் தீவிரவாதிகள் குடி கொண்டிருப்பது அரசுக்குள் எனவும் குற்றம் சுமத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற பொது எதிரணியின் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் குறிப்பிடுகையில்;
நாட்டின் தலைவரை தெரிவு செய்ய இன்னமும் இருப்பது மூன்று நாட்களே. இருக்கின்றன. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்ப்பது அமைதியானதொருஇ நியாயமானதொரு தேர்தலையே. இதனையே நாமும் வலியுறுத்துகின்றோம். எனினும் ஜனாதிபதி தனது முழுமையான அதிகாரத்துடன் களத்தில் இறங்கியுள்ளார். ஊடகங்களையும் அரச நிறுவனங்களையும் தனது பக்கம் ஈர்த்து தனது அடக்குமுறை அரசியலை மேற்கொள்கிறார். பொலிஸும் இராணுவமும் அரசின் பக்கம் செல்கின்றது. தேர்தல் சட்டம் மீறப்பட்டு இவர்களின் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது.
பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு எம்மை தவறாக சித்திரிக்கின்றனர். எனினும் அரசுக்குள் இருக்கும் தீவிரவாதிகள் இவர்களின் கண்களுக்கு தெரியவில்லை. இது மக்களுக்கு தெரியும். இம்முறை தேர்தலில் என்ன செய்தாலும் வெற்றி இருப்பது பொது எதிரணியின் பக்கமே. நாம் இன்று அனைவரையும் ஒன்றிணைத்து விட்டோம். சிங்களஇ தமிழ்இ முஸ்லிம் அரசியல் தலைமை அனைத்தும் ஒன்றிணைந்து விட்டது. இது எமக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியே. எனவேஇ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகத்தை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனவும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply