8 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு: பூமியை போன்று தோன்றும் 2 கிரகங்கள்
அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளியில் ஆய்வு மேற்கொள்ள கெப்லர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த அதி நவீன டெலஸ்கோப் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது புதிய 8 கிரகங்களை கண்டுபிடித்து போட்டோ எடுத்து கெப்லர் டெலஸ்கோப் அனுப்பியுள்ளது. அது குறித்து ஹார்வர்ட் ஸ்மித் சோனியன் மைய நிபுணர் கில்லர்மோ டோரஸ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.அதில் 2 கிரகங்கள் பூமியை போன்று மனிதர்கள் வாழக்கூடிய நிலையில் உள்ளன. அவற்றுக்கு கெப்லர் – 438பி மற்றும் கெப்லர்–442 பி என பெயரிடப்பட்டுள்ளன. இவை சிவப்பு நிற சிறிய நட்சத்திரங்களை சுற்றி வருகின்றன.
இந்த நட்சத்திரங்கள் சூரியனை விட சிறியதாகவும், குளிர்ச்சி வாய்ந்ததாகவும் உள்ளன. இந்த 2 கிரகங்களும் பூமியை விட 12 சதவீதம் பெரியதாகும். இவற்றில் பூமியில் இருப்பதை போன்று பாறைகள் உள்ளன.
கெப்லர்–438பி கிராகத்தில் 70 சதவீதம் பாறைகள் உள்ளன. கெப்லர்–442பி கிரகத்தில் 60 சதவீதம் பாறைகள் இருக்கின்றன. இந்த 2 கிரகங்களிலும் சூரிய வெளிச்சம் நிரம்பி உள்ளது. தண்ணீர் ஆவி நிலையில் உள்ளது.
இந்த 2 கிரகங்களிலும் பூமியை போன்று 97 சதவீதம் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்திய கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply